சக மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்து கொள்வது சகஜமான ஒன்று. ஆனால், மகாராஷ்டிராவில் கிளியின் மீது ஒருவர் புகார் அளித்துள்ளார்.


மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 72 வயது முதியவர் ஒருவர், கிளியின் தொடர்ச்சியான அலறல் மற்றும் சத்தம் காரணமாக காவல்துறையில் புகார் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.






சுரேஷ் ஷிண்டே தனது பக்கத்து வீட்டுக்காரரான அக்பர் அம்ஜத் கான் மீது காட்கி காவல்நிலையத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி புகார் அளித்தார். அவரின் கிளி தொடர்ந்து கத்துவதால் தனக்கு தொந்தரவாக இருப்பதாக சுரேஷ் ஷிண்டே புகாரில் குறிப்பிட்டுள்ளார். சிவாஜிநகர் பகுதியில் இவர்களின் குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது.


இதுகுறித்து காட்கி காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஷிண்டேவின் புகாரின் பேரில் கிளியின் உரிமையாளருக்கு எதிராக அமைதியை கெடுத்ததாகவும் மிரட்டியதாகவும் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் விதிகளின்படி செயல்படுவோம்" என்றார்.


 






கொலை, வன்கொடுமை போன்ற குற்றங்களுக்கு ஒருவர் மற்றொருவர் மீது வழக்கு பதிவு செய்வது இயல்பான ஒன்று. ஆனால், விலங்குகளின் மீது புகார் தெரிவிப்பது எல்லாம் அரிதிலும் அரிதான ஒன்று. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவே இல்லை எனக் கூற முடியாது. முன்னதாக, அரிதிலும் அரிதான சம்பவங்கள் இது போல நடந்திருக்கிறது.


 






குறிப்பாக, விலங்கின் உரிமையாளர், விலங்குக்கு திருட கற்று கொடுத்து திருட வைப்பது எல்லாம் இங்கு நடந்துள்ளது. இருப்பினும், சகிப்பு தன்மை என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்று. ஒருவரை ஒருவர் சகித்து கொண்டு வாழ்வது தான் வாழ்க்கை. அதேநேரத்தில், மற்றவர்களுக்கு தொந்தரவு தராமல் இருப்பதும் முக்கியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண