குடிமகன்களுக்கு ஒரு நற்செய்தி! சரக்கு விலை 20% அதிரடி குறைப்பு!. உடனே கடை திறந்திடுமே என்று அவசரப்பட்டு கிளம்பி விடாதீர்கள். ஏன் என்றால் விலையைக் குறைத்திருப்பது ஆந்திர அரசு. ஆனால், காரணம் என்னவோ நம்ம தமிழ்நாடுதாங்க.


தமிழகத்தில் மதுபான கடைகளை அரசு (TASMAC) ஏற்று நடத்துவது போல ஆந்திரா மாநிலத்தில் ஆந்திர பிரதேஷ் ஸ்டேட் பீவரேஜஸ் கார்பரேஷன் லிமிடெட் (APSBCL) என்னும் நிறுவனம் மூலம் அம்மாநிலத்தில் மது விற்பனையை மேற்கொண்டு வருகிறது. 


கொரோனா பெருந்தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலுக்கு வந்தபோது வெகுகாலமாக மதுபானக் கடைகளும் மூடப்பட்டன. பின்னர் ஆந்திராவில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டபோது சரக்குகளின் விலை பல மடங்கு அதிகரித்திருந்தது.  தாறுமாறு விலையேற்றம் என்று சொல்லும் வகையில் மதுபான வகைகளின் விலை 50% வரை உயர்த்தப்பட்டது. இது மதுப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  ஆனால் அப்போது தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் திறக்கப்படாததால் ஆந்திர எல்லையில் இருந்த கடைகளுக்குச் சென்ற குடிமகன்கள் விலையேற்றத்தையும் பொருட்படுத்தாமல் அதிக விலை கொடுத்து மதுவை வாங்கி வந்தனர். இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. ஆந்திர மாநிலத்தை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் மதுபானங்கள் விலை குறைவு. 


இதனால், ஆந்திர தமிழ்நாடு எல்லையில் உள்ள ஆந்திர மக்கள் ஐந்தாறு கிலோமீட்டர் பயணம் என்றாலும் பரவாயில்லை என்று தமிழ்நாட்டு மதுபானக் கடைகளில் மதுவை வாங்குகின்றனர். கடந்த 6 மாதங்களாக இதுதான் நிலவரமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளில் வருமானம் அதிகரிக்க தொடங்கியது. அதேவேளையில் இந்த மாவட்டங்களை ஒட்டிய ஆந்திர கிராமங்களில் சரக்கு விற்பனை சர்ரென சரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த ஆந்திர மாநில அரசு அதிரடியாக மதுபான வகைகளின் விலையை 20% குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த விலை குறைப்பு மதுப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இனிமேல் ஆந்திராவில் மது விற்பனை அதிகரிக்கும் என்று அம்மாநில அரசு எதிர்பார்க்கிறது. ஆனால், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை குறையும். இனி அடுத்த என்ன செய்யலாம் என்று டாஸ்மாக்கும் யோசிக்கலாம்.


நம்மூரில் சரக்கு விலை நிலவரம் என்ன?


ஆந்திராவில் இருந்து இங்கு வந்து மதுப்பிரியர்கள் மது வாங்கியதற்குக் காரணமாக விலைப் பட்டியல் இதோ உங்களுக்காக:




ஆந்திராவில் சரக்கு விலை குறைந்திருப்பதால், இங்கேயும் குறைக்க வேண்டும் என்று குடிமகன்கள் கோரிக்கை விடுத்தாலும் கூட நிலைமை வேறு மாதிரி இருக்கின்றது. இப்போது இருக்கும் விலையில் கூட ரூ.10 முதல் ரூ.25 வரை உயர்த்தினால் தான் வருமானத்தை உறுதி செய்யலாம், இல்லாவிட்டால் வருவாயில் பாதி கடை வாடகை, கடை பராமரிப்பு, சரக்கு கூலிக்கே சென்றுவிடும் என டாஸ்மாக் மேலாளர்கள் கூறி வருகின்றனர்.