ஆந்திர மாநிலத்தில் போக்குவரத்து காவலர் ஒருவரை தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ :
ஆந்திர மாநிலத்தில் போக்குவரத்து காவலர் ஒருவர் குடிமகன் ஒருவரை காலால் எட்டி உதைத்து , அவரை அடிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலானது. இச்சம்பவம் சனிக்கிழமை அன்னமய்யா வட்டம் அருகே ஏஐஆர் பை-பாஸ் சாலை பகுதியில் நடந்தது. இதனை அங்கிருந்த ஒருவர் புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிரவே அது மிகப்பெரிய வைரலானது. இது மனித தன்மையற்ற செயல் என பலரும் ஊடகங்களில் விமர்சிக்க தொடங்கிவிட்டனர். இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் தலைமை காவலரை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளனர்.
காவல்துறை விளக்கம் :
இது குறித்து விளக்கம் அளித்த திருப்பதி போக்குவரத்து டிஎஸ்பி கட்டம் ராஜு, “ காவலரால் தாக்கப்பட்ட அந்த நபர் குடிபோதையில் இருந்தார். ஞாயிற்றுக்கிழமை, ஆர்சி புரம் சாலை வழியாகச் சென்று கொண்டிருந்த ஆந்திரப் பிரதேச சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் ஓட்டுநரை தடுத்து , பஸ்ஸை எடுக்க விடாமல் தடுத்துக்கொண்டிருந்தார்.குடிபோதையில் இருந்த நபர் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்ததால் அந்த பகுதியில் கடுமையான டிராஃபிக் ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் பணியில் இருந்த தலைமை காவலர் விசாரணை நடத்தியிருக்கிறார். அப்போது குடிபோதையில் இருந்த நபர் காவலரை தகாத வாத்தையில் பேசியிருக்கிறார். அதனால்தான் காவலர் அவரை பதிலுக்கு தாக்கியிருக்கிறார். ஆனாலும் நாங்கள் அந்த காவலரை பணி நீக்கம் செய்திருக்கிறோம். இது குறித்த விசாரணை நடைப்பெற்று வருகிறது" என தெரிவித்தார்.
குழந்தையை காப்பாற்றிய போக்குவரத்து காவலர் :
இது ஒரு புறம் இருக்க போக்குவரத்து காவலர் ஒருவர் குழந்தை ஒன்றினை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவமும் அரங்கேறியுள்ளது.ஆட்டோ ரிக்ஷாவில் பயணம் செய்த குழந்தை ஒன்று , ஆட்டோவை திருப்பும் தருவாயில் கீழே விழுந்து விடுகிறது. குழந்தைக்கு பின்னால் ஒரு தனியார் பேருந்து வருவதையும் நாம் காண முடிகிறது. குழந்தை விழுவதை பார்த்த பேருந்து ஓட்டுநர் வாகனத்தை உடனே நிறுத்தி விடுகிறார். என்றாலும் கூட அதனையெல்லாம் பொருட்படுத்தாத போக்குவரத்து காவலர் , திடீரென முந்திச்சென்று , கீழே விழுந்த குழந்தயை தூக்கி அணைத்துக்கொண்டார். அதே நேரத்தில் ஆட்டோவில் இருந்து இறங்கிய பெண்மணி ஒருவரிடம் அந்த குழந்தையை காவலர் ஒப்படைக்கிறார். இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.