ஆந்திராவில் 8 மாதங்களுக்கும் மேலாக பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 13 வயது சிறுமியை காவல்துறையினர் மீட்டுள்ளனர். அந்த சிறுமியிடம் நடத்திய விசாரணையில் கடந்த 8 மாதத்தில் 80க்கும் மேற்பட்ட ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த ஏப்ரல் 19 ம் தேதி செவ்வாய்கிழமை அன்று பி.டெக் மாணவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், குற்றத்தில் ஈடுபட்ட 80 பேரையும் கைது செய்ததாகவும், தப்பியோடிய குற்றவாளிகளை காவல்துறையினர் தேடியும் வருகின்றனர்.


2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொரோனா நோய்தொற்று பரவிய காலத்தில் மருத்துவமனையில் சிறுமியின் தாயுடன் சவர்ண குமாரி என்ற பெண் நட்பாக பேசியுள்ளார். குடும்பத்தின் வறுமையை காரணம்காட்டி அந்த சிறுமியை சவர்ண குமாரி தத்தெடுத்துள்ளார். சிறுமியின் தாய் ஒருசில நாட்களில் கொரோனா தொற்று காரணமாக இறந்துவிட, சிறுமியின் தந்தைக்கு தெரியாமல் அந்த பெண் சிறுமியை அழைத்து சென்றுள்ளார். 


தந்தை புகார் : 


சிறுமியை காணாமல் போனது தொடர்பாக அவரது தந்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், முக்கிய குற்றவாளியான சவர்ண குமாரியை கடந்த ஜனவரி மாதம் கைது செய்தனர். 


தொடர்ந்து, சவர்ண குமாரியிடம் நடத்திய விசாரணையில் அடிப்படையில், நேற்று பி.டெக் மாணவர் உட்பட 10 பேர் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த சிறுமி குறித்து பல திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. 


வெளியான அதிர்ச்சிகர தகவல் : 


 ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கடந்த 8 மாதங்களாக அந்த 13 வயது சிறுமியை வெவ்வேறு விபச்சார விடுதிகளுக்கு மாற்றப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும்,  இதன் அடிப்படையில், சிறுமியை அழைத்துச் சென்ற பெண் சவர்ண குமாரியை சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய முக்கிய குற்றவாளி என வழக்குபதிவு செய்தனர். 


இது தொடர்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கே.சுப்ரஜா கூறுகையில், சிறுமியின் வயது மற்றும் சூழ்நிலையைப் பயன்படுத்தி, பல கும்பல் சிறுமியை விலைக்கு வாங்கி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் தள்ளியதாகவும்,  குற்றம் சாட்டப்பட்ட 80 பேரை போலீஸார் அடையாளம் கண்டு, விபச்சார கும்பலின் தலைவர், 35 புரோகர், வாடிக்கையாளர்கள் என அனைவரையும் கைது செய்யத் தொடங்கியுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் லண்டனில் இருப்பதாகவும் அவரை கைது செய்யப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 


இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து இதுவரை ஒரு கார், 53 செல்போன்கள், 3 ஆட்டோக்கள் மற்றும் பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விஜயவாடா, ஹைதராபாத், காக்கிநாடா மற்றும் நெல்லூர் ஆகிய இடங்களில் இருந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண