ஆந்திர பிரதேச மாநிலத்தில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான வெள்ள பாதிப்புகளை அம்மாநில முதலமைச்சர் ஓய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி (YS Jagan Mohan Reddy) பார்வையிட்டார். அப்போது நடந்த நெகிழ்ச்சியாக தருணத்தை இணையத்தில் பலரும் பகிந்து வருகின்றனர்.
வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஜெகன் மோகன் ரெட்டி அம்பேத்கர் கொனசீமா (Ambedkar Konaseema )மாவட்டத்தில் உள்ள கிராமங்களைப் பார்வையிட்டார். அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களிடம் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
பெடபுடிலங்கா (Pedapudilanka) கிராமத்தில் தாய் ஒருவர் தனது எட்டுமாத கைக்குழந்தையுடன் முதலமைச்சரை காண காத்திருந்தார். அப்போது, ஜெகன் மோகன் ரெட்டி, அக்குழந்தையை தூக்கிக் கொண்டார். குழந்தையின் மழலை மொழியை ரசித்தார். தாயிடம் உரையாடி கொண்டிருந்தார். அப்போது, சுட்டிக் குழந்தை ஜெகன் மோகனின் சட்டை பையில் இருந்த பேனாவை எடுத்து சுறுசுறுப்புடன் விளையாடியது.
அதைக் கவனிக்காமல் ஜெகன் மோகன் குழந்தையைக் கொஞ்சிவிட்டு தாயிடம் கொடுத்தார். சுற்றி இருந்தவர்கள், உங்கள் பேனா குழந்தையிடம் இருக்கிறது என்று கூறினார்கள். இதை கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி, அக்குழந்தையிடம் இருந்து பேனாவைத் திருப்பி வாங்காமல் இருந்துவிட்டார். சுட்டிக் குழந்தையிடமே பேனாவைக் கொடுத்துவிட்டு சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
அனைவரும் ஜெகன் மோகனின் செயலை பாராட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்