ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மும்மொழிக் கொள்கை பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு "மொழி என்பது தொடர்புக்கான ஒரு வழிமுறை மட்டுமே. தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் பிற மொழிகள் உலகளவில் பிரகாசிக்கின்றன என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
அறிவு வேறு, மொழி வேறு. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் சர்வதேச மொழிகள் உட்பட 10 மொழிகளை நான் ஊக்குவிக்கப் போகிறேன். மாணவர்கள் அங்கு படிக்கலாம், சென்று வேலை செய்யலாம்.
மூன்று மொழிகள் மட்டுமல்ல, பல மொழிகளையும் நான் ஊக்குவிப்பேன். தெலுங்கை ஊக்குவிக்க வேண்டியிருந்தது. வாழ்வாதாரத்திற்கான ஒரு சர்வதேச மொழியாக இருப்பதால், ஆங்கிலத்தையும் ஊக்குவிக்க வேண்டும். மக்களுடன் எளிதில் பழக இந்தி கற்றுக்கொள்வது நல்லது.” எனத் தெரிவித்தார்.