ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சிறப்பு விமானம் விஜயவாடாவில் உள்ள கன்னவரம் விமான நிலையத்தில் இன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது. தொழில்நிட்பக் கோளாறு காரணமாக, விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையிறக்கப்பட்டது.






ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.சிறப்பு விமானம் பத்திரமாக தரையிறங்கியதை அடுத்து, முதல்வரின் டெல்லி பயணத்திற்கான மாற்று ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.


முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அதிகாரிகள் குழுவினர் டெல்லிக்கு வருகை தருவதற்காக மாலை 5:03 மணிக்கு புறப்பட்டனர். விஜயவாடாவில் உள்ள கன்னவரம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கவனித்தார். விமானம் மீண்டும் விஜயவாடா விமான நிலையத்தில் மாலை 5:27 மணிக்கு தரையிறங்கியது. ததேபள்ளி இல்லத்துக்கு முதல்வர் சென்றடைந்தார்.


மற்றொரு நிகழ்வு:


கடந்த திங்கள்கிழமை அதிகாலை மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோரை ஏற்றிக்கொண்டு ஜல்கான் மாவட்டத்திற்கு மாநில அரசு விமானம் மோசமான வானிலையை சந்தித்ததால் அதே விமானம் மீண்டும் மும்பை திரும்பியது.


மும்பையில் இருந்து 415 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜல்கான் மாவட்டத்தில் உள்ள ஜாம்னருக்கு ஷிண்டே மற்றும் ஃபட்னாவிஸ் ஆகியோர் 'பஞ்சார கும்ப் 2023' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றனர். அங்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முக்கியப் பேச்சாளராக இருந்தார்.


விமானம் மும்பையில் இருந்து புறப்பட்ட நிலையில் மோசமான வானிலை காரணமாக திரும்ப வேண்டியிருந்தது என்று முதலமைச்சர் அலுவலக (CMO) அதிகாரி தெரிவித்தார். ஷிண்டே மற்றும் ஃபட்னாவிஸ் பின்னர் வீடியோ கான்பரன்சிங் மூலம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.