சமூக வலைதளங்களில் எப்போதும் தன்னுடைய பதிவுகளின் மூலம் பலரின் கவனத்தை ஈர்க்கும் நபர்களில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவும் ஒருவர். அந்தவகையில் இன்று அவர் அன்னையர் தினம் தொடர்பாக ஒரு பதிவை ஒன்றை செய்துள்ளார். அந்தப் பதிவு பலரிடம் வரவேற்பை பெற்றுள்ளது. 


 


அதில், “அன்னையர் தினத்தன்று இட்லி அம்மாவிற்கு நாங்கள் கூறிய வீட்டை கட்டி தந்துள்ளோம் என்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அவர் ஒரு தன்னலமிக்க அன்பிற்கு அடையாளமாக விளங்கி வருகிறார். அவருக்கு உதவியது எனக்கு மிகப்பெரிய பெருமை. அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார். 


 






2019ஆம் ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த கமலாத்தாள் என்ற வயதான பெண்மணி இட்லி அம்மா என்ற பெயரில் மிகவும் வைரலாகினார். அவர் சுமார் 30 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு இட்லிகளை செய்து விற்று வந்தார். அந்த வீடியோவை அப்போது பார்த்த ஆனந்த் மஹிந்திரா அந்த இட்லி அம்மாவிற்கு தன்னால் இயன்ற உதவியை செய்ய போகிறேன் என்று பதிவிட்டுருந்தார். இதைத் தொடர்ந்து அந்த அம்மாவிற்கு உடனடி தேவை என்ற தெரிந்து கொண்டு அந்த உதவியை அவர் செய்ய தொடங்கினார். 


 


அதாவது அந்த அம்மாவிற்கு தங்க சரியான வீடு இல்லை என்பதை தெரிந்து கொண்டு அவருக்கு வீடு ஒன்றை கட்டிக் கொடுக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ஆனந்த மஹிந்திராவின் குழுவினர் தொண்டாமுத்தூர் சென்று  அங்கு இடத்தை பதிவு செய்துள்ளனர். அதன்பின்னர் அங்கு வீடு கட்டும் பணிகளை தொடங்கியுள்ளனர். 


 






இவை தவிர கமலாத்தாள் அம்மா விரகு அடுப்பு வைத்து சமைக்கிறார் என்பதை உணர்ந்த மஹிந்திரா அவருக்கு ஒரு பாரத் எரிவாயு இணைப்பையும் வாங்கி கொடுத்துள்ளார். அத்துடன் ஒரு எரிவாயு அடுப்பையும் வாங்கி கொடுத்து உதவியுள்ளார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண