சமூக வலைதளங்களில் எப்போதும் தன்னுடைய பதிவுகளின் மூலம் பலரின் கவனத்தை ஈர்ப்பவர் ஆன்ந்த மஹிந்திரா. அதிலும் குறிப்பாக இவருடைய ட்விட்டர் பக்கத்தில் போடப்படும் பல பதிவுகள் வேகமாக வைரலாகிவிடும். அத்துடன் இவர் ட்விட்டர் தளத்தில் பல பொதுமக்களின் கேள்விகளுக்கும் அவ்வப்போது பதிலளித்து பதிவுகளை தொடர்ந்து செய்து வருகிறார். அந்தவகையில் தற்போது ஒருவர் கேட்ட கேள்விக்கு ட்விட்டரில் அதிரடியாக ஒரு பதிலை இவர் கூறியுள்ளார். 


ட்விட்டர் தளத்தில் ஒருவர் நேற்று ஆனந்த் மஹிந்திராவிடம் ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அதில்,”இது சற்று முட்டாள்தனமான கேள்விதான். இருந்தாலும் பரவாயில்லை நான் கேட்கிறேன். நீங்கள் ஒரு பஞ்சாபிதானே சார்? ” எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அவரின் அந்த கேள்விக்கு ஆனந்த் மஹிந்திரா அதிரடியான பதிலை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 






அந்தப் பதிவில்,”இது ஒரு முட்டாள்தனமாக கேள்வி அல்ல. ஆனால் இந்த கேள்விக்கு என்னுடைய நேரடியான பதில் ஒன்று தான். நான் ஒரு இந்தியன்” எனப் பதிவிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவை பலரும் பாராட்டியுள்ளனர். குறிப்பாக ஒருவர் சக்தே இந்தியா திரைப்படத்தில் வரும் காட்சியை போல் இந்த பதில் அமைந்துள்ளது எனப் பதிவிட்டுள்ளார். சக்தே இந்தியா திரைப்படத்தில் விளையாட்டு வீராங்கனைகள் தங்களுடைய பெயர்களுடன் மாநில பெயர்களை கூறுவார்கள். அதை மாற்றி அனைவரும் தங்களுடைய பெயர்களுக்கு பின்னால் இந்தியாவை தான் சொல்ல வேண்டும் என்று பயிற்சியாளர் ஷாரூக்கான் கூறுவார். அதைப்போல் இந்த பதில் அமைந்துள்ளது என்று சிலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 






 






 






 






 


மேலும் படிக்க: காற்றில் பறந்த கொரோனா விதிகள்.. ஜுஜு பிறந்தநாளுக்கு 7 லட்சம் செலவு.. கடுப்பான காவல்துறை.. மூவர் கைது..