மகாராஷ்டிராவில் மருந்து கடைக்காரர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தொடர்பாக பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  தையல்காரர் ஒருவர் இதேபோன்று, கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார்.


 






54 வயதான உமேஷ் கோல்ஹே, மகாராஷ்டிரா அமராவதி நகரில் ஜூன் 21 அன்று வேலையை முடிந்துவிட்டு வீடு திரும்பியபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.


காவல்துறையினரால் வெளியிடப்பட்ட சிசிடிவி காட்சிகளில், இரவு 10 மணியளவில் கோல்ஹே தாக்கப்படுவதற்கு முன்பு அவரை சிலர் பின்தொடர்வது பதிவாகியுள்ளது. அப்போது, அவரது 27 வயது மகனும் மனைவியும் மற்றொரு வாகனத்தில் சென்று கொண்டிருந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.




உள்ளூரைச் சேர்ந்த ஒரு சாரார் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினரை கடுமையாக சாடியுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை இந்த வழக்கை உதய்பூர் கொலையை விசாரிக்கும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியுள்ளார். 


கொலை நடந்த 12 நாட்களில், ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். ஆனால் இன்று காலை வரை நுபுர் ஷர்மா சம்பவத்துடன் இதை தொடர்புப்படுத்தவில்லை. இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "நுபுர் ஷர்மாவைப் பற்றி அவர் பதிவிட்டதால் அவரைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் எங்களிடம் கூறியுள்ளனர்" என்றார்.


இது தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "நுபுர் ஷர்மாவின் கருத்துகளுக்கு ஆதரவாக சில வாட்ஸ்அப் குழுக்களில் அவர் கருத்து பகிர்ந்துள்ளார். தனது வாடிக்கையாளர்கள் இருந்த வாட்ஸ்அப் குழுவில் இந்த கருத்தை தவறாகப் பகிர்ந்துள்ளார்" என்றார்.


கோல்ஹே கொலைக்காக கைது செய்யப்பட்ட 6 பேரும் அமராவதியில் வசிக்கும் முதாசிர் அகமது, 22, ஷாருக் பதான், 25, அப்துல் தௌபீக், 24, ஷோயப் கான், 22, அதிப் ரஷீத், 22 மற்றும் யூசுப் கான் பகதூர், 44 என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.  அவரை கொல்ல பயன்படுத்திய கத்தியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண