✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

விமான நிலையத்தில் காக்கும் நேரத்தை குறைக்க FTI-TTP திட்டம்: தொடங்கி வைத்த அமைச்சர் அமித்ஷா

செல்வகுமார்   |  23 Jun 2024 11:19 AM (IST)

இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மற்றும் Overseas Citizen of India (OCI) அட்டை வைத்திருப்போர்களின் விமான பயணத்தை மேம்படுத்தும் வகையில் FTI-TTP திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

டெல்லி விமான நிலையம்: image credits;@PTI

விமான பயணிகள், விமான நிலையத்தில் வரிசையில் காக்கும் நேரத்தை குறைக்கும் வகையில் FTI-TTP திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 

FTI-TTP: 

டெல்லி விமான நிலையமானது, ஃபாஸ்ட் ட்ராக் இமிக்ரேஷன்-டிரஸ்டெட் டிராவலர் திட்டத்தை ( 'Fast Track Immigration-Trusted Traveller Programme ) அறிமுகப்படுத்திய நாட்டின் முதல் விமான நிலையமாக உருவெடுத்துள்ளது. 'Fast Track Immigration-Trusted Traveller Programme (FTI-TTP),  டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மற்றும் Overseas Citizen of India (OCI) cardholders வைத்திருப்பவர்களுக்கு இந்த பயன்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ( ஜுன்  22 ) டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 3 இல் பயணிகளுக்கான பிரத்யேக கவுண்டர்களை திறந்து வைத்தார்.  

FTI-TTP என்றால் என்ன? 

FTI-TTP என்பது, இந்திய அரசாங்கத்தின் தொலைநோக்கு முன் முயற்சியாகும். இது இந்திய குடிமக்கள் மற்றும் OCI கார்டுதாரர்களுக்கு விரைவான, எளிதான மற்றும் பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயண வசதியையும் செயல்திறனையும் மேம்படுத்துவதற்காக, இந்திய அரசாங்கத்தின் முயற்சியாக கருதப்படுகிறது.  இந்த வசதியானது, இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்ததப்பட்ட வசதியாகும்.

நெரிசல் குறைப்பு:

immigration clearance- ஐ விரைவுப்படுத்துவதன் மூலம் விமான நிலையங்களில் நெரிசலைக் கணிசமாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் கருதப்படுகிறது.  டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 3ல் எட்டு எலக்ட்ரானிக் கேட்கள் பொருத்தப்பட்டுள்ளன.

நான்கு வருகைக்கும் நான்கு மற்றும் புறப்படுவதற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் தேவைக்கு ஏற்ப கவுண்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தகவல் தெரிவிக்கின்றன.  உள்நாட்டு விவகார அமைச்சகம் (MHA), சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் குடியேற்றப் பணியகத்துடன் இணைந்து, இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.  

இந்நிலையில், immigration clearance விரைவாகவும் எளிமையாகவும் இருக்கும் என்பதால், பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க தேவையில்லை என்றும் , இதனால் நேர விரயம் குறைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Published at: 23 Jun 2024 11:19 AM (IST)
Tags: Delhi Immigration Amit Shah FTI-TTP
  • முகப்பு
  • செய்திகள்
  • இந்தியா
  • விமான நிலையத்தில் காக்கும் நேரத்தை குறைக்க FTI-TTP திட்டம்: தொடங்கி வைத்த அமைச்சர் அமித்ஷா
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.