கடந்த ஓராண்டாக மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் ஜம்மு & காஷ்மீர் உள்ளது.  இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இங்கு சட்ட மன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே, இங்கு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை கணக்கில் கொண்டு பாரதிய ஜனதா கட்சி பல்வேறு முறைகளில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள பாராமுல்லாவில் மிகவும் பிரமாண்ட பேரணியை நடத்தியது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பாராமுல்லா பகுதியில் நடைபெற்ற  இந்த பிரமாண்ட பேரணியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீர் இதற்கு முன்னர் பயங்கரவாதத்தின் ஹாட் ஸ்பாட்டாக இருந்தது, தற்போது, சுற்றுலாத் தளமாக விளங்குகிறது என பேசியுள்ளார்.


மேலும் இந்த பேரணிக்குப் பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்  கலந்து கொண்டு அவர் பேசுகையில், ”இந்தியப் பிரதமர் மோடியின் ஆட்சியில், நாடு வளர்ச்சியையும் வேலை வாய்ப்பினையும் பெற்றுள்ளது. இதற்கு முன்னர் இங்கு ஆட்சியில் இருந்த குப்கர் மாடல் ஆட்சி இங்குள்ள இளைஞர்கள் கையில் கற்களையும் துப்பாக்கிகளையும் வழங்கியுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக்க்கும் குப்கரின் ஆட்சிக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. மேலும், கடந்த 70 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரை ஆண்டு வந்த முஃப்தி மற்றும் அப்துல்லா ஆட்சியில் இருந்தனர். அவர்கள் வீடற்ற மக்களுக்கு வீடுகளை வழங்குவதாக கூறிவந்தனர். ஆனால் செய்யவில்லை. ஆனால இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவை ஆட்சி செய்து வரக்கூடிய ஆண்டுகளான 2014 முதல் 2022 வரை ஒரு லட்சம் வீடற்ற மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளார். 






மேலும் அவர் பேசுகையில், மிகவிரைவில் ஜம்மு காஷ்மீரில் பொதுத் தேர்தல் நடைபெறும். அதற்காக விரிவான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.  அந்த பணிகள் முடிந்ததும் மிகவும் வெளிப்படையான சட்ட மன்ற பொதுத் தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் பயங்கரவாதத்தை ஜம்மு & காஷ்மீரில் இருந்து துடைத்து அகற்ற விரும்புகிறோம் என அவர் தெரிவித்துள்ளார். 






விரைவில் ஜம்மு காஷ்மீரில் நடைபெறவுள்ள தேர்தலைக் கண்க்கில் கொண்டு தான், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் புதிய கட்சியை தொடங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜனநாயக ஆசாத் கட்சி என்ற கட்சியை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.