India Military Expenditure: இந்திய ராணுவத்திற்கான வருடாந்திர செலவு கடந்த ஆண்டு 88 பில்லியன் அதாவது ரூ.7.5 லட்சம் கோடி என கூறப்படுகிறது.

இந்திய ராணுவத்திற்கான வருடாந்திர செலவு:

ராணுவத்திற்கான வருடாந்திர செலவுகளில் இந்தியா சர்வதேச அளவில் 5வது இடத்தை பிடித்துள்ளது. நமது நாட்டின் மொத்த ராணுவ செலவானது பாகிஸ்தானை காட்டிலும் 9 மடங்கு அதிகமாகும். அதேநேரம், ஆணு ஆயுத திறன் கொண்ட மற்றொரு அண்டை நாடான சீனாவுடன் ஒப்பிடுகையில், நமது நாட்டின் ராணுவத்திற்கான செலவு 4 மடங்கு குறைவாகும். பனிப்போர் முடிந்த பிறகு உலக நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் ராணுவத்திற்கு செலவிடும் தொகை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன. அதன்படி, தற்போதைய புவிசார் மோதல் மற்றும் போர் பதற்றம் காரணமாக, உலக நாடுகளின் கடந்தாண்டு ராணுவ செலவு 2 ஆயிரத்து 718 பில்லியன் அமெரிக்க டாலர்களாக எகிறியுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள டாப் 10 நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனியை தொடர்ந்து, இந்தியா 5வது இடத்தை பிடித்துள்ளது.

2,718 பில்லிய77 அமென் அமெரிக்க டாலர்கள்:

கடந்த ஆண்டில் சர்வதேச ராணுவ செலவுகளின் விகிதம் 9.4 சதவிகிதம் உயர்ந்துள்ளது. உலக நாடுகளின் மொத்த ராணுவ செலவில் 60 சதவிகிதம் அதாவது ஆயிரத்து 635 பில்லியன் அமெரிக்க டாலர்களை, முதல் 5 நாடுகள் மட்டுமே சாரும் என, ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதிக்கான ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையானது பஹல்காமில் அரங்கேறிய தீவிரவாத தாக்குதலால் ஏற்பட்டுள்ள, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் சூழலுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. இதேநேரத்தில் தான் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் சீனாவும் ராணுவப் படைகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ராணுவத்தில் பணத்தை கொட்டிய டாப் 10 நாடுகள்:

  • அமெரிக்கா - 997 அமெரிக்க டாலர்கள்
  • சீனா - 314 அமெரிக்க டாலர்கள்
  • ரஷ்யா - 149 அமெரிக்க டாலர்கள்
  • ஜெர்மனி - 88 அமெரிக்க டாலர்கள்
  • இந்தியா - 86 அமெரிக்க டாலர்கள்
  • இங்கிலாந்து - 82 அமெரிக்க டாலர்கள்
  • சவுதி அரேபியா - 80 அமெரிக்க டாலர்கள்
  • உக்ரைன் - 65 அமெரிக்க டாலர்கள்
  • ஃப்ரான்ஸ் - 65 அமெரிக்க டாலர்கள்
  • ஜப்பான் - 55 அமெரிக்க டாலர்கள்

அதேநேரம், பாகிஸ்தான் வெறும் 10 பில்லியன் ராணுவ செலவுடன் இந்த பட்டியலில் 29வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் பாகிஸ்தானை விட பல்வேறு விதங்களில் இந்தியா ராணுவ பலத்தில் வலுவாக உள்ளது.

ராணுவத்தின் பெரும் செலவு:

ராணுவத்திற்காக அதிக செலவிடும் நாடுகளின் பட்டியலில் டாப்-5ல் இருந்தாலும், அதனை பிரித்து பார்க்கும்போது பல சிக்கல்களும் உள்ளன. காரணம் 2025-26ம் ஆண்டிற்கான 6.8 லட்சம் கோடி பட்ஜெட்டில் சுமார் 22 சதவிகிதம் மட்டுமே புதிய ஆயுத அமைப்புகள் மற்றும் தளவாடங்களின் கொள்முதலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை ஆயுதப்படைகளின் ஊதியம் மற்றும் அன்றாட செலவுகளுக்காகவே பயன்படுத்தப்படுகிறது.  குறிப்பாக முன்னாள் வீரர்களின் ஓய்வூதியப் பலன்களுக்கும் பெரும் தொகை பயன்படுத்தப்படுகிறது. எல்லையில் நிலவும் சீனா மற்றும் பாகிஸ்தானின் கூட்டு அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தி திறனில் 2.5 சதவிகிதத்தை ராணுவ செலவுகளுக்காக ஒதுக்க வேண்டியுள்ளது. ஆனால், வெளியாகியுள்ள தரவுகளின்படி 1.9 சதவிகிதம்மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி சார்ந்த ராணுவம்:

வலுவான ராணுவ தொழிற்சாலை கட்டமைப்பு இல்லாததால், உலகிலேயே அதிக ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அதோடு, நாட்டின் புவிசார் அரசியல் விருப்பங்களுக்கு ஏற்ப ராணுவத் திறன்களை முறையாக உருவாக்குவதற்கான உறுதியான நீண்டகால திட்டங்கள் ஒப்பீட்டளவில் இல்லாதது மற்றொரு பெரிய பிரச்சனையாக உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள், டாங்கி எதிர்ப்பு வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள் மற்றும் இரவு நேர சண்டை திறன்கள் வரை பல பிரிவுகளில் பெரிய செயல்பாட்டு பற்றாக்குறையை ஆயுதப் படைகள் தொடர்ந்து எதிர்கொள்கின்றன.

சீனாவின் ராணுவ பலம்:

பாகிஸ்தான் தனது ராணுவத்தை வலுப்படுத்த பெரிய நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்றாலும், சீனா பல்வேறு விதமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, நிலம், வான் மற்றும் கடல் மற்றும் அணுசக்தி, விண்வெளி மற்றும் சைபர் ஆகிய பாரம்பரிய களங்களில் விரைவாக நவீனமயமாக்கி வருகிறது.  அதன் அதிகாரப்பூர்வ ராணுவ பட்ஜெட்டில் தொடர்ந்து 30 வது ஆண்டாக் உயர்வை கண்டுள்ளது. இது உண்மையில் அந்நாடு செலவிடுவதை விட மிகக் குறைவு என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் தனது ராணுவத்திற்கு $314 பில்லியனை சீனா ஒதுக்கியது இது 2023 ஐ விட 7% அதிகமாகும்.  2024 ஆம் ஆண்டில் சீனா பல மேம்பட்ட ராணுவத் திறன்களை வெளிப்படுத்தியது. அவற்றில் புதிய ஸ்டெல்த் போர் விமானங்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAVகள்) மற்றும் ஆளில்லா நீருக்கடி வாகனங்கள் ஆகியவை அடங்கும்.