மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளில் முக்கிய கட்சியாக ஐக்கிய ஜனதா தளமும் உள்ளது. பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநில முதல்வராக மூத்த அரசியல்வாதி நிதிஷ்குமார் பொறுப்பு வகித்து வருகிறார்.


இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் தேசிய தலைவருமாகிய ராஜீவ் ரஞ்சன்சிங் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது, “ கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானது. அப்போதே, மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பங்கேற்க வேண்டாம் என்ற முடிவை எடுத்துவிட்டோம். அந்த நிலைப்பாட்டில் நாங்கள் இப்போதும் உறுதியாக உள்ளோம்.




ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் பொறுப்பை வகித்த ஆர்.சி.பி. சிங், மத்திய அமைச்சரவையில் இணைந்து அமைச்சராகும் முடிவை தானே எடுத்துக்கொண்டார். எனவே, அவரிடம்தான் கேள்வி எழுப்ப வேண்டும். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முதன்மையான தலைவர் நிதிஷ்குமார்.  கட்சியில் தற்போது தேசியத் தலைவராக பதவியில் உள்ள நானும், இதற்கு முன்பு அப்பதவியை வகித்த ஆர்.சி.பி.சிங்கும் நிதிஷ்குமார் ஆசியுடன்தான் பொறுப்பு ஏற்றுக்கொண்டோம். மத்திய அமைச்சரவையில் நாங்கள் பங்கேற்கவில்லை என்பதால் ஐக்கிய ஜனதா தளத்திற்கும், பா.ஜ.க.விற்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை”


இவ்வாறு அவர் கூறினார்.


பீகாரில் பா.ஜ.க.வும், ஐக்கிய ஜனதா தள கட்சியும் சட்டசபைத் தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் இணைந்து போட்டியிடுவார்கள் என்று கூறியுள்ளார். ஆனால், பீகார் மாநில பா.ஜ.க. தலைவர்கள், நிர்வாகிகள் அவ்வப்போது ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகின்றனர்.





பீகாரில் ஆட்சியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் வெறும் 43 இடங்களை மட்டுமே கைவசம் வைத்துள்ளது. ஆனால், கூட்டணி கட்சியான பா.ஜ.க. 74 எம்.எல்.ஏ.க்களை தங்கள் வசம் வைத்துள்ளனர். மற்றவர்கள் 51 இடங்களில் உள்ளனர். பா.ஜ.க.வின் பெரும்பான்மை ஆதரவுடன்தான் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பீகாரில் ஆட்சி புரிந்து வருகிறது. இதன்காரணமாக, பீகாரில் பா.ஜ.க.வைச் சேர்ந்த இருவருக்கு துணை முதல்வர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளது.  


இந்த பரபரப்பான சூழலில், ஐக்கிய ஜனதா தள கட்சியின் எம்.எல்.ஏ.க்களுடன் நிதிஷ்குமார் பாட்னாவில் அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண