சமீபத்தில் முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு ஆந்திராவில் ஆளும் கட்சியாக ஒய்.எஸ்.ஆர்.சி.பி மூலம் அரசியலில் இணைந்தார். ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியில் சேர்ந்த அவர், 8 நாட்களில் அக்கட்சியை விட்டு வெளியேறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஆனால் தற்போது அம்பத்தி ராயுடு மீண்டும் அரசியலில் யு டர்ன் எடுத்துள்ளார். அதன்படி, நடிகர் பவன் கல்யாணை சந்தித்து மீண்டும் அரசியலில் அம்பதி ராயுடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.  அம்பதி ராயுடு பவன் கல்யாணை சந்தித்த பிறகு, ஒரு பதிவை பதிவிட்டார். அந்த பதிவில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி.யில் இருந்து விலகியதை பற்றியும், தனது புதிய அரசியல் பயணத்தை பற்றியும் கூறியுள்ளார்.


அம்பதி ராயுடு வெளியிட்ட பதிவில் கூறியதாவது, “ஆந்திர மக்களுக்கு சேவை செய்யவே நான் அரசியலுக்கு வந்தேன். என் எண்ணங்களும் இதயமும் தூய்மையானவை. உதாரணமாக, நான் YSRCP இல் சேர்ந்து அதில், நான் எதிர்பார்த்தபடி மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்று நினைத்தேன். பல்வேறு காலகட்டத்தில் நான் ஆந்திர மக்களுக்காக களத்தில் இறங்கி பல கிராமங்களுக்குச் சென்றேன். மேலும் பலரை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்தார். மக்களின் பிரச்சினைகளை தீர்க்க 100 சதவீதம் என்னால் முடிந்ததை செய்வேன் என்று உறுதி அளித்தேன். 






ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியுடன் எனது கனவை நிறைவேற்ற முடியவில்லை:


நான் நிறைய சமூகப் பணிகள் செய்துள்ளேன். ஆனால் சில காரணங்களால் ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியுடன் எனது கனவை நிறைவேற்ற முடியவில்லை என்று உணர்ந்தேன். இருப்பினும், நான் இதற்காக யாரையும் குறிப்பிட்டு எதையும் சொல்லவில்லை. எனது சித்தாந்தங்களும் YSRCP கட்சியின் கொள்கைகளும் பொருந்தாததால், எந்த இடத்திலும் தேர்தலில் போட்டியிடுவதில் அர்த்தமில்லை. இதனால் ஒய்.எஸ்.ஆர்.சி.பி.யில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்” என்றார்.


அரசியலில் இருந்து விலக முடிவு செய்தேன், ஆனால்...


தொடர்ந்து அவர் அந்த பதிவில், “நான் அரசியலில் இருந்து விலக முடிவை அறிவித்தபோது, எனது ரசிகர்களும் நலம் விரும்பிகளும் பவன் கல்யாணின் ‘ஜன சேனா’ கட்சியில் இணைய அறிவுறுத்தினார்கள். பவன் கல்யாணின் சித்தாந்தத்தை புரிந்து கொள்ள வேண்டுமானால் பவன் அண்ணாவை சந்திக்க வேண்டும் என்றார்கள். அதனால்தான், நான் பவன் அண்ணாவைச் சந்தித்து நிறைய நேரம் பேசினேன். இதன் போது வாழ்க்கை மற்றும் அரசியல் தொடர்பான பல விஷயங்கள் குறித்து பேசினோம். எனக்கும் பவன் அண்ணாவுக்கும் உள்ள சித்தாந்தம் மிகவும் ஒத்திருக்கிறது என்று சொல்ல விரும்புகிறேன். அவரும் என்னைப் போலவே நினைக்கிறார். அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். இருந்தாலும், இந்த முறை கிரிக்கெட்டுக்காக துபாய் செல்வேன். அரசியலில் இணைகிறேனா என்பதை பற்றி அப்புறம் சொல்கிறேன். ஆனால் ஆந்திர மக்களுக்கு சேவை செய்ய எப்போதும் இருப்பேன்.” என்று பதிவிட்டிருந்தார்.