Anant Ambani Wedding Program:அனந்த் அம்பானி திருமண விழா: யார் வந்துள்ளார்கள்! என்ன நிகழ்ச்சி, என்ன உணவு தெரியுமா?
Ambani son Anant Ambani wedding: அனந்த அம்பானியின் இன்றைய திருமண நிகழ்வில் பங்கேற்ற பிரபலங்கள் குறித்தும் இசை நிகழ்ச்சிகள் குறித்தும் உணவுகள் குறித்தும் தெரிந்து கொள்வோம்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், உலகின் டாப் பணக்காரர்களின் ஒருவருமான முகேஸ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானியின் திருமண கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த விழாவில் யாரும் எதிர்பாராத நடிகர் ரஜினியின் நடனும் இடம் பெற்றிருக்கிறது.
எங்கு நடைபெற்றது?
திருமண நிகழ்ச்சியானது, மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.
Just In




அப்போது, முகேஷ் அம்பானி, அவரது மனைவி நிதா முகேஷ் அம்பானி மற்றும் அவர்களின் மூன்று குழந்தைகளான - மணமகன் அனந்த், அவரது மூத்த சகோதரர் ஆகாஷ் மற்றும் அவரது மனைவி ஷ்லோகா மேத்தா மற்றும் அவரது கணவர் ஆனந்த் பிரமல் உடன் வந்த சகோதரி இஷா ஆகியோரின் குடும்ப புகைப்படம் எடுக்கப்பட்ட காட்சி.
உணவுகள்:
திருமண நிகழ்ச்சிகளில் வழங்கப்பட்ட உணவுகளான, பனாரஸ் சேட் உணவுகளான சாட், மித்தாய், லஸ்ஸி, சாய், காரி, பான் மற்றும் முக்வாஸ் ஆகியவை மெனுவில் உள்ளன.
இவை தவிர இனிப்புகள், பான் மற்றும் முக்வாஸ், அகமதாபாத்தில் இருந்து காரிக், சாட் கவுண்டர்கள், மாலை டோஸ்ட் மற்றும் சாய், லஸ்ஸி மற்றும் லெமன் டீ ஆகியவை விருந்தினர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள உணவு கவுண்டர்கள் பனாரஸின் பணக்கார மற்றும் மாறுபட்ட உணவு கலாச்சாரத்தை மும்பைக்கு கொண்டு வந்துள்ளன.
வண்ணமயாக கட்டமைக்கப்பட்ட உணவு ஸ்டால்கள் மற்றும் பிரத்யேக விருந்தினர் சேவைகள் பங்கேற்பாளர்கள் நிகழ்வை ரசிக்க ஏதுவாக வடைவமைக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய - கலாச்சாரம்:
நாட்டின் பாரம்பரிய கலைகளை பிரதிபலிக்கும் வகையில் பித்தளை, மட்பாண்டங்கள், போன்றவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பனராஸ் மற்றும் காஞ்சிபுரம் பட்டு புடவைகள், போல்கி நகைகள் மற்றும் ரோஸ்வுட் மரச்சாமான்கள் ஆகியவை காட்சி படுத்தபட்டுள்ளன.
ஜோதிடக் கடை, அத்தர் கடை, பூக்கடை, வளையல் விற்பனையாளர், பொம்மலாட்டம், புகைப்பட ஸ்டுடியோ ஆகியவையும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கும் திருமண விருந்தினர்களுக்கு, இந்திய கலை, கலாச்சாரங்களை காணுவம் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இசை நிகழ்ச்சி:
பிரபல இசைக்கலைஞர்களால் ஹிந்துஸ்தானி இசைமூலம் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டன ர். திருமண விழாக்களில் ஹரிஹரன், சங்கர் மகாதேவன், ஸ்ரேயா கோஷல் உள்ளிட்ட பிரபல பாடகர்கள் பாடல் பாடி அசத்தினர்.
50 ஜோடிகளுக்கு இலவச திருமணம்:
மேலும் 50 ஏழை ஜோடிகளுக்கு திருமண நிகழ்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பிரபலங்கள் பங்கேற்பு:
முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனாஸ், நடிகர் ரஜினி மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் ராம் சரண் உள்ளிட்ட பல தென்னிந்திய நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் நடனாமாடும் காட்சி:
கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர்,ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.