சிவன் கோயிலில் மாட்டிறைச்சி வைத்த வழக்கு.. நீதிமன்ற நடவடிக்கை என்ன?

இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளான ஆசிப், இலியாஸ், நிஹால் மற்றும் ஷாருக் ஆகியோருக்கு ஏற்கனவே செப்டம்பர் மாதம் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

Continues below advertisement

சிவன் கோவிலில் மாட்டிறைச்சியை வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியது.

Continues below advertisement

வழக்கு விபரம்

கடந்த ஜூலை மாதம் சிவன் கோயிலில் மாட்டிறைச்சி வைத்ததாக எழுந்த சர்ச்சையில் கீழ் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரஹீம், எஃப்.ஐ.ஆரில் பெயரிடப்படவில்லை என்றாலும், அவரிடம் இருந்து, மாடு அறுப்பதற்கான கருவியாகப் பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் ‘மரப் பலகை’ ஆகியவை மீட்கப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளான ஆசிப், இலியாஸ், நிஹால் மற்றும் ஷாருக் ஆகியோருக்கு ஏற்கனவே செப்டம்பர் மாதம் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

சிவன் கோயிலில் பீஃப் இறைச்சி

இந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்து இந்த சம்பவத்தை தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மீது சப்-இன்ஸ்பெக்டரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள ரசூலாபாத் கிராமத்திற்கு அருகே சப்-இன்ஸ்பெக்டர் வாகனங்களை வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ​​அந்த கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலில், மாட்டிறைச்சி இருந்ததாகவும், அதனை அகற்றிவிட்டு கோயில் கழுவப்பட்டதாகவும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்: TN Rain Alert: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. எங்கெல்லாம் மழை? அறிவுறுத்தல் என்னன்னு தெரியுமா?

வழக்குப்பதிவு

அதன்பிறகு, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153, 153A, 295, 295A, 120-B, 34 மற்றும் UP பசுவதைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3/5/8 ஆகியவற்றின் கீழ் கன்னோஜில் உள்ள தல்கிராம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுவில், ரஹீம் முதல் தகவல் அறிக்கையில் தனது பெயர் குறிப்பிடப்படவில்லை அல்லது சம்பவ இடத்தில் இருந்து கைது செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.

பெயில் வழங்கிய நீதிமன்றம்

ரஹீமுக்கு முந்தைய குற்ற வரலாறு இல்லை என்பதை வலியுறுத்தி, ரஹீம் ஜூலை 17, 2022 முதல் சிறையில் வாடுவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கும் போது, ​​அவரது வழக்கறிஞர் ஜாமீன் கோரினார். ஜாமீன் மனுவை எதிர்த்த அரசு கூடுதல் வழக்கறிஞர், விண்ணப்பதாரரின் குற்றமற்றதன்மையை விசாரணைக்கு முந்தைய கட்டத்தில் தீர்ப்பளிக்க முடியாது என்று வாதிட்டார். இந்த நிலையில், பதிவு செய்யப்பட்ட பொருள் / ஆதாரங்கள், முன்வைக்கப்பட்ட வாதங்கள், இந்திய அரசியலமைப்பின் 21 வது பிரிவின் பெரிய ஆணை மற்றும் டத்தாராம் சிங் Vs உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நீதிபதி சுரேந்திர சிங் பெஞ்ச், ரஹீமுக்கு பெயில் வழங்கியது.

Continues below advertisement
Sponsored Links by Taboola