MP Kangana Ranaut: பலாத்காரத்தில் பாஜக எம்.பி கங்கனா ரனாவத்திற்கு அதிக அனுபவம் இருந்தால், எப்படி நடைபெற்றது என்பதை விளக்க வேண்டும் என சிரோமணி அகாலிதளத்தின் முன்னாள் எம்.பி தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து:


பாஜக கொண்டுவந்த மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது, ​​"உடல்கள் தூக்கில் தொங்கவிடப்பட்டதாகவும், பலாத்காரம் சம்பவங்கள் நடைபெற்றதாகவும்" நடிகையும் பாஜக எம்.பி-யுமான கங்கனா ரனாவத் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தர். 


மேலும் , ஒரு நேர்காணலில் பேசுகையில் நீக்கப்பட்ட மூன்று சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்களுக்கு எதிரான நீடித்த போராட்டங்களுக்குப் பின்னால் வெளிநாட்டு சக்திகள் இருப்பதாகவும் கூறினார். இது பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.


கங்கனாவுக்கு கண்டனம்:


இதையடுத்து “விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் கங்கனா ரனாவத் கூறிய கருத்துக்கு, பாஜகவும் கண்டனம் தெரிவித்தது. மேலும், இவரது கருத்து அக்கட்சியின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை” என்றும் பாஜக அறிக்கையில் தெரிவித்தது.  இதுபோன்று பேசக்கூடாது எனவும் கட்சி எச்சரிக்கை விடுத்தது.


இந்நிலையில், பாஜக தலைவர் ஜேபி நட்டாவை கங்கனா ரனாவத சந்தித்தார். இருவருக்கிடையேயான உரையாடல்கள் சுமார் 30 நிமிடம் இருந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. இதுபோன்ற பேச வேண்டாம் என எச்சரித்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன.


அகாலி தளத்தின் முன்னாள் எம்.பி சர்ச்சை கருத்து:


இந்நிலையில், "விவசாயிகளின் போராட்டத்தின் போது பாலியல் பலாத்காரம் நடந்தது" என்று கங்கனா ரனாவத் கூறியதற்கு எதிராக சிரோமணி அகாலி தளத்தின் அமிர்தசரஸ் தலைவரும் முன்னாள் எம்.பி-யுமான சிம்ரஞ்சித் சிங் மான் காட்டாமாக பேசியுள்ளார்.  அவர் பேசியதாவது“ "நான் அதைச் சொல்ல விரும்பவில்லை, ஆனால் அவருக்கு பலாத்காரத்தில் அதிக அனுபவம் இருந்தால், அது எப்படி நடைபெற்றது என்பதை விளக்க வேண்டும் என அவர் தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.