Airlines: பெண் தோழியை விமானத்தின் காக்பிட்டுக்குள் அழைத்து வந்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக, விமானத்தில் பல்வேறு சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக விமான பணியாளரிடம் பயணி ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் பிரச்னையாக வெடித்தது. இப்படி, சர்ச்சை மேல் சர்ச்சை வெடித்து வருகிறது.
ரூ.30 லட்சம் அபராதம்
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி துபாயில் இருந்து டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் விமானி ஒருவர் தனது தோழி டிஜிசிஏ விதிகளை மீறி, அனுமதியில்லாமல் விமானத்தின் கட்டுபாட்டு அறைக்குள் (cockpit) அழைத்து சென்றுள்ளார். காக்பிட்டுக்குள் அழைத்து வந்ததோடு விமானி பணிப்பெண்ணை கடுமையாக பேசியதவாக தெரிகிறது. இதனால் விமான பணிப்பெண் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, டிஜிசிஏ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்த சம்பவத்திற்கு ஏர் இந்தியா விமானம் எந்தவித உடனடி தீர்வும் எடுக்கவில்லை. இதனால் விமான போக்குவரத்து இயக்குநரகம், பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் உடனடியாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்திற்காக ஏர் இந்திய விமான நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்தும், விமானியை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டுள்ளது.
என்ன நடந்தது?
கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி துபாயில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் (AI915Df) சென்றுள்ளது. அந்த விமானத்தை இயக்கிய விமானி ஒருவர், அதே விமானத்தில் பயணித்த தனது தோழியை, விமான அறைக்கு வரவழைத்து அவருக்கு அருகே அமரவைத்துக் கொண்டு விமானத்தை இயக்கியுள்ளார்.
அதாவது, தோழியை மகிழ்ச்சிப்படுத்த இதுபோன்று செய்துள்ளதாக தெரிகிறது. மேலும், தனது தோழிக்கு மதுபானம் வழங்குமாறு பணிப்பெண்ணிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவ்வாறு வழங்க முடியாது என பணிப்பெண் கூறியதால், விமானி அவரை கடுமையாக திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. காக்பிட் பகுதியில் பயணிகள் அனுமதிப்பது என்பது பாதுகாப்பு தொடர்பான விதிமீறலாகும்.
காக்பிட் பகுதியில் விமானி ஒருவர் தனது தோழியை சுமார் ஒரு மணி நேரம் அமர வைத்த புகாரில் சம்பந்தப்பட்ட விமானியை சஸ்பெண்ட் செய்து விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
School Teachers dismiss: 36 ஆயிரம் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் டிஸ்மிஸ்...கொல்கத்தா உயர் நீதிமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை...காரணம் என்ன?
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தாது: ஆளுநர் தமிழிசை தடாலடி..!