ஏர் இந்தியா விமானத்தின் மெனுவில் சிக்கன் செட்டிநாடு, மீன் குழம்பு உள்ளிட்ட புதிய உணவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 69 ஆண்டுகளுக்குப் பிறகு அரசிடமிருந்து மீண்டும் டாடா சன்ஸ் குழுமத்தின் கைகளுக்கு வந்த நிலையில், டாடா சன்ஸ் ஏர் இந்தியாவை மேம்படுத்துவதில் முழு கவனம் செலுத்தி வருகிறது.
ஏர் இந்தியாவை புதுப்பொலிவுடன் மாற்றியமைக்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது. மேலும் சமீபத்தில் தொடங்கப்பட்ட ஆகாச ஏர், ஏர் ஏசியா, விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய மெனுக்களை அறிமுகப்படுத்தின. அதன் ஒரு பகுதியாக புதிய உணவுகளை தனது மெனுவில் ஏர் இந்தியா இணைத்துள்ளது.
பிசின்ஸ், எகானமி வகுப்புகளுக்கு தனித்தனியாக மெனுக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவை பின்வருமாறு:
எகானமி வகுப்பு
காலை:
சீஸ் மஷ்ரூம் ஆம்லேட், ஜீரா ஆலூ வெட்ஜ், கார்லிக் ஸ்பினாச் கார்ன்
மதியம்:
வெஜிடபிள் பிரியாணி, மலபார் சிக்கன் கறி, கலந்த காய்கறி பொறியல்
மாலை:
வெஜ் ஃபிரைடு நூடுல்ஸ், சில்லி சிக்கன், ப்ளூபரி வனிலா பேஸ்ட்ரி, காஃபி ட்ரஃபிள் ஸ்லைஸ்
பிசினஸ் கிளாஸ்
காலை:
பட்டரி குரோசண்ட், டார்க் சாக்லேட் ஓட்மீல் மஃபின், சீஸ் மற்றும் ட்ரஃபிள் ஆயில் ஸ்க்ராம்பிள்டு முட்டை, மஸ்டர்ட் கிரீம் கோட்டட் சிக்கன் சாஸேஜ், ஆலூ பராத்தா, மெதுவடை, பொடி இட்லி.
மதியம்:
மீன் குழம்பு, சிக்கன் செட்டிநாடு, உருளைக்கிழங்கு பொடிமாஸ்
மாலை:
சிக்கன் 65, பெஸ்டோ சிக்கன் சாண்ட்விச், மும்பை பட்டட்ட வடை.
இந்நிலையில் ஏர் இந்தியாவின் இந்த அதிரடி அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.