Ahmedabad Flight Crash: அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் வெடித்து நொறுங்கியதில் விமானத்தில் பயணித்த 241 பயணிகளும், விமானம் மோதியதில் 33 பேரும் என 274 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த இந்தியாவையுமே சோகத்தில் மூழ்கடித்த இந்த சம்பவம் எப்படி நிகழ்ந்திருக்கலாம்? என்று அமெரிக்காவில் வசிக்கும் தமிழரான விமானி சின்னப்பன் அசோகன் விளக்கம் அளித்துள்ளார்.
கேப்டன், ஃபர்ஸ்ட் ஆபீசர் பணி என்ன?
அதில் விமானி அசோகன் கூறியிருப்பதாவது, கருப்பு பெட்டி கிடைத்துள்ளது. அதன் முடிவுகள் வெளிவரவில்லை. முதன்மை முடிவுகள் ஒரு மாதத்தில் வரும். அல்லது சீக்கிரமாக கூட வரலாம். இந்தியாவுடன் இணைந்து போயிங், எஃப்ஐஏ, ஐரோப்பியா ஆகியோரும் விசாரணை நடத்துவதால் விரைவாக வந்துவிடும்.
இந்த விமானத்தில் விமானியும், ஃபர்ஸ்ட் ஆபீசரும் உள்ளனர். ஃபர்ஸ்ட் ஆபீசர் வலதுபுறமும், கேப்டன் இடதுபுறமும் அமருவார்கள். ஒருவர் பைலட் ஃப்ளையிங், இன்னொருவர் பைலட் மானிட்டரிங். ஒருவர் விமானத்தை ஓட்டுவார். சில நேரங்களில் அது கேப்டனாக இருக்கும். சில நேரங்களில் ஃபர்ஸ்ட் ஆபீசராகவும் இருக்கலாம்.
பணிகள் என்னென்ன?
இந்த விமானத்தில் கேப்டன்தான் பைலட் ஃப்ளையிங். அதாவது, அவரது கையில்தான் விமானத்தை இயக்கும் பொறுப்பு இருந்தது. இவர் மானிட்டர்தான் பண்ணுவாரு. மானிட்டர் பண்றவருதான் லேண்டிங் கியரை மேலே கொண்டு போவாரு. விமானம் டேக் ஆஃப் ஆன உடன், முதல் விஷயம் என்னவென்றால் ரன்வே-யை விட்டு மேலே போயிருக்காது.
400, 500 அடிதான் போயிருக்கும். மேலே வந்தவுடன் அந்த லேண்டிங் கியருக்கு வேலை கிடையாது. என்ன காரணம் என்றால், இந்த லேண்டிங் கியர் வெளியில் இருந்தால் காற்றில் மோதி விமானத்தின் வேகத்தை தடுக்கும் என்பதால் உடனடியாக அந்த லேண்டிங் கியர் உள்ளே இழுக்கப்படும். இது 400, 500 அடியிலே நடந்துடும். ரன்வேையை விட்டு தாண்டும் முன்பே இது நடந்து விடும்.
லேண்டிங் கியர் - ப்ளாஃப்:
இந்த விமானத்தில் யாரோ எடுத்த படம் ஒரு ஆதாரமாக இருக்கிறது. அதில் அவர்கள் ஏற்கனவே ரன்வேயை விட்டு வெளியே சென்று விட்டனர். 625 அடி சென்று விட்டனர். லேண்டிங் கியர் வெளியே இருக்கிறது. ப்ளாஃப் உள்ளே இருக்கிறது. (இறக்கையில் இருப்பதே ப்ளாஃப்) இறக்கை மேலே தூக்கி விமானம் பறக்க இது உதவியாக இருக்கிறது. இது எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ அவ்வளவு வேகமாக மேலே தூக்க முடியும். அதேசமயம் வேகத்திற்கு இது முட்டுக்கட்டையாக இருக்கும். இதுதான் டேக் ஆஃப்பிற்கும், லேண்டிற்கும் முக்கிய காரணம்.
ரன்வே 11 ஆயிரம் என்றால் 8 ஆயிரம், 7 ஆயிரத்திலே டேக் ஆஃப் ஆகிடும். பாதி ரன்வேஃயிலே மேலே போயிடுவாங்க. அதுக்கு மேலே கூடுதல் ரன்வே வைக்க முடியாது. நடைமுறை சாத்தியமில்லை அது. ஏராளமானோர் எப்படி ப்ளாஃப் இல்லாமல் டேக் ஆஃப் பண்ண முடியும் என்று கேட்கிறார்கள்? சத்தியமா பண்ணியிருக்க முடியாது.
எப்படி விபத்து நடத்திருக்கும்?
ப்ளாஃப் இல்லாமல் அவர்கள் டேக் ஆஃப் பண்ணியிருந்தால் எச்சரிக்கை கொடுக்கும். பைலட் உஷார் ஆகிடுவாங்க. எச்சரிக்கையை மீறி டேக் ஆஃப் பண்ண வாய்ப்பு இல்லை. என் யூகத்தின்படி அவர்கள் ப்ளாஃப் போட்டுத்தான் எடுத்துள்ளார்கள். 2008ல் தான் ப்ளாஃப் போடாமல் விபத்து ஏற்பட்டது. இது 675 அடி உயரத்திற்கு சென்றிருப்பதால் கண்டிப்பாக ப்ளாஃப் போட்டுதான் எடுத்துள்ளனர். இல்லாவிட்டால் மேலே சென்றவுடன் கீழே விழுந்திருக்கும்.
விமானத்தை ஓட்டிய கேப்டன் ஃபர்ஸ்ட் ஆபீசருக்கு கியர் அப் போடச் சொல்லி உத்தரவு கொடுத்திருப்பார். ஒருவேளை அந்த ஃபர்ஸ்ட் ஆபீசர் கியருக்கு பதிலாக வழக்கமாக பண்ணும் ப்ளாஃப்-ஐ ஒரு வேளை ஏதோ ஒரு நினைவில் ப்ளாஃப்-ஐ செயல்படுத்தியிருக்கலாம். இது ஒரு அனுமானம். இது நிச்சயம் கிடையாது. அனுமானம். அப்படி பண்ணியிருந்தால் இந்த விபத்திற்கு அதுதான் காரணம். ஏனென்றால் விமான வேகத்திற்கும், லேண்டிங் கியரும், ப்ளாஃப்பும் எதிர்மறையாக செயல்படத் தொடங்கும்.
கேப்டனுக்கு நேரம் இல்லை:
அப்போது இரண்டு எஞ்சின்லயும் பவர் இருந்தாலும் இறங்கிட்டே போகும். ஆனால், விமானி கட்டுப்படுத்த முயற்சித்துள்ளார். அவருக்கு போதுமான நேரம் இல்லை. இந்த குறையை கண்டுபிடிக்க அவருக்கு போதிய நேரம் இல்லை. ஏனென்றால் கேப்டன் டேக் ஆஃப் பண்ணும்போது வெளியேதான் பார்ப்பார்கள். ஏதாவது பறவைகள் வருகிறதா? என்றுதான் பார்ப்பார்கள்.
வழக்கமாக விமானிகள் அந்த கண்ணாடியை மட்டுமே பார்ப்பார்கள். ஃபர்ஸ்ட் ஆபீசர்தான் இதை கவனிப்பார்கள். ஃபர்ஸ்ட் ஆபீசர் இந்த தவறை செய்திருந்தால் இந்த விபத்திற்கு அதுதான் முக்கிய காரணமாக இருந்திருக்கும். இது உறுதி என்று கூற முடியாது. விபத்திற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
ஏனென்றால் விமான விபத்து 4 காரணங்களால்தான் நடக்கும். விமானிகளின் தவறு, தொழில்நுட்ப கோளாறு, தட்பவெப்பநிலை மற்றும் வெடிகுண்டு தாக்குதல். இந்த சம்பவத்தில் தட்ப வெப்பநிலையை எந்த குறையுமே கூற முடியாது. வெடிகுண்டு தாக்குதலும் கிடையாது. அப்போது விமானிகளின் தவறு அல்லது தொழில்நுட்ப கோளாறு இந்த இரண்டில் ஒன்றுதான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.