இன்றைய காலத்தில் எப்படியாவது ஒரு நல்ல வேலை கிடைச்சிடணும்தான் இருப்போம். அப்படியும் நல்ல வேலை கிடைத்தாலும் வேலை அழுத்தம் காரணமாக இதைவிட நல்ல வேலை இருக்காதா என்றாகிவிடுகிறது. நிறுவனங்கள் பல பேர் சேர்ந்து செய்யவேண்டிய வேலையை ஒருவரிடமே வாங்குவதும் நிகழ்கிறது. இதற்கு மல்டி-டாஸ்கிங் என்று பெருமையாக சொல்லி கொள்கிறார்கள். பணி சூழல் என்பது முழுவதுமாக மாற்றிவிட்டது என்றே சொல்லலாம். போலவே, பணிமாற்றங்களும் அவரவர்களின் தேர்வுதான். ஒரு நிறுவனத்தில் பணியிலிருந்து விலகுகிறேன் என்பதை ‘பணி விலகல் கடிதம்’ மூலம் தெரிவிப்பது வழக்கம். அப்படியிருக்க, இன்டர்நெட்டில் மூன்றே வார்த்தைகளில் எழுதப்பட்ட பணி விலகல் கடிதம் ஒன்று வைரலாகிவருகிறது. பலரும் இதற்கு ரொம்பவே எளிமையான கடிதம், ’ஆளை விடுடா சாமி’ ‘விட்டா போதும் ஓடிடுவேன்’ போன்ற கமெண்ட்களுடன் இந்தக் கடிதத்தை பகிர்ந்துவருகிறார்கள்.
இந்த பணி விலகல் கடிதம் யாருடையது என்ற விவரம் தெரியவில்லை. இக்கடிதத்தில் ஒன்பதே வார்த்தைகளில் எழுதப்பட்ட பணி விலகல் கடிதம். அதில் 'Bye..Bye.. sir' என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை பலரும் நகைச்சுவையுடன், ஒரு கடிதம் கூட முழுவதுமாக எழுதவில்லை என்றால், அவருக்கு அலுவலகத்தில் என்னெல்லாம் பிரச்சனைகள் இருந்திருக்குமோ, மன வேதனையில் இப்படி செய்திருப்பார் என்றும், வேலையைவிட்டு செல்வதற்கு உயர் அதிகாரிகளிடம் விளையாட்டாக இப்படி செய்திருப்பார் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இன்னும் சிலரோ, இவருக்கு முறையாக ஒரு கடிதம் எழுத விருப்பமில்லை போலும், அதனால், நேரடியாக என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லிவிட்டார் என்றும் டிவிட்டரில் கமெண்ட் செய்து வருகிறார்கள். இதை பலரும் மீம் கன்டெண்ட்களாக மாற்றி வருகிறார்கள்.
சிலரோ, இவர் வேலைபார்த்த நிறுவனத்தில் எவ்வளவு தொல்லைகளை சந்திருந்தால், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மூன்றே வார்த்தைகளில் பணி விலகல் கடிதத்தை கொடுத்திருப்பார் என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்