இந்நிலையில், நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விவாதிக்கக்கோரி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி. 






நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று கடந்த 2001 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தினம் அனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கம்போல் அவை இயங்கி வந்ததது. இந்நிலையில் நேற்று மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து  2 பேர் பார்வையளர்கள் மாடத்தில் இருந்து கிழே குதித்து, கண்ணீர் புகை குண்டு வீசும் குப்பிக்ளை போன்ற பொருட்களை வீசினர். இதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியானது. பின் சுற்றியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு பேரையும் பிடித்து பாதுகாவலரிடம் ஒப்படைத்தனர். மேலும் நாடாளுமன்ற வாசலிலும் வண்ண புகையை வெளிப்படுத்தும் கருவிகள் பயன்படுத்தப்பட்டது.  அதனை தொடர்ந்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






இந்த சம்பவம் நாடு முழுவதும் தீயாய் பரவியது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் நாடாளுமன்றத்தில் இருக்கும் பாதுகாப்பு குறைபாடுகள் தான் காரணம் எனவும் குறீப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “ நாடாளுமன்றத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டுள்ளது, இது  நமது ஜனநாயகக் கோயிலுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. தாமதமின்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடி விசாரணையைத் தொடங்கவும், எதிர்காலத் தவறுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைச் செயல்படுத்தவும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்” என தெரிவித்துள்ளார். 


இந்த சூழலில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்பு இருப்பதாக டெல்லி காவல் துறை தரப்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 6 பேரில் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஒருவர் மட்டும் ஹரியானாவை சேர்ந்தவர் என்றும் டெல்லி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 பேர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 2 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 


இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அவையில் விவாதிக்கக்கோரி காங்கிரஸ் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விதி 267-ன் கீழ் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்த விவாதிக்க காங்கிரஸ் எம்.பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


EB Bill: மின் கட்டணம் செலுத்துவதில் ”அடுத்த ஆஃபர்” - மிக்ஜாம் புயல் பாதித்த 4 மாவட்ட மக்களுக்கு புதிய அறிவிப்பு