Aditya L1 Mission: ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்த முக்கிய  அப்டேட்டை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது. அதில், ஆதித்யா எல்-1 விண்கலம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.


ஆதித்யா எல்-1:


சூரியனை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சார்பில் ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் சூரியனின் மேல் வளிமண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆராய்ச்சி செய்ய உள்ளது. பூமியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள லாக்ரேஞ்ச் புள்ளி 1-இல் சூரியனை நோக்கி இந்த விண்கலம் நிலைநிறுத்தப்படும்.


அதன்பிறகு, அதில் உள்ள 7 கருவிகள் சூரியன் குறித்த ஆய்வை மேற்கொள்ள உள்ளன.  இதற்கிடையில், ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்றுவட்டபாதைகள் படிப்படியாக உயரத்தப்பட்டன. கடந்த 30ஆம் தேதி பூமியில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் 9.2 லட்சம் கிலோ மீட்டர் தொலைவை வெற்றிகரமாக கடந்தது. 


இதற்கிடையில், கடந்த 30ஆம் தேதி பூமியில் இருந்து அதித்யா எல்-1 விண்கலம் 9.2 லட்சம் கிலோ மீட்டர் தொலைவை வெற்றிகரமாக கடந்தது.  இதனால், பூமியின் ஈர்ப்பு  விசை உள்ள பகுதியை விட்டு வெளியேறிய ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியன் குறித்த ஆய்வுக்காக லாக்ரோஞ்ச் எல்-1 புள்ளியை நோக்கி பயணிக்க தொடங்கியது. 


இஸ்ரோ அப்டேட்:


இந்நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்து புதிய அப்டேட்டை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதில், "ஆதித்யா எல்-1 விண்கலம் ஆரோக்கியமாக உள்ளது. விண்கலம் திட்டமிட்டப்படி செயல்பட்டு வருகிறது. இந்த விண்கலம் சூரியன் மற்றும் பூமிக்கு இடையேயான எல்-1 புள்ளியை நோக்கி செல்கிறது.






 Trajectory Correction Maneuvre (TCM) எனும் விண்கலத்தின் பாதை மாற்று பணி அக்டோபர் 6ஆம் தேதி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. இது வெற்றிகரமாக 16 விநாடிகளில் நிகழத்தப்பட்டுள்ளது. கடந்த 19ஆம் தேதி லாக்ரேஞ்சன் புள்ளி 1ல் இன்செர்ஷன் நிகழ்த்தப்பட்டது. இதனால், விண்கலத்தின் பாதையை சரிசெய்ய இந்த செயல்பாடு தேவையானதாக இருந்தது. இந்த கருவி சூரியனில் இருந்து வெளிவரும் துகள்களின் காந்த தன்மை குறித்த ஆய்வை மேற்கொள்ளும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


நோக்கம் என்ன?


சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து லெக்ராஞ்சியன் 1 புள்ளியில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு, இந்த செயற்கைக்கோள் சூரியன் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும். லெக்ராஞ்சியன் புள்ளியை அடைந்தபிறகு கிரகணங்கள் அல்லது மறைவுகளால் தடையின்றி தொடர்ந்து சூரியனை கண்காணித்து ஆய்வு பணியில் மேற்கொள்ளும்.


இதனிடையே, ஆதித்யா எல்1 விண்கலம் அறிவியல் ரீதியான தரவுகளை எற்கனவே சேகரிக்கத் தொடங்கியுள்ளது. பூமியில் இருந்து 50 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள துகல்களை ஆய்வு செய்ய இந்த அறிவியல் தரவுகள் உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆதித்யா எல்1 விண்கலத்தில் உள்ள STEPS எனும் கருவியில் பொறுத்தப்பட்டுள்ள 6 சென்சார்கள் மூலம் இந்த அறிவியல் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.