அதானி குழும நிறுவனங்களின் மொத்த கடன் ரூ.2 லட்சம் கோடியில் எஸ்.பி.ஐ அளித்த கடன் தொகை மட்டும் ரூ.21,375 கோடி என்று தெரியவந்துள்ளது. அதேபோல், இண்டஸ்இண்ட் வங்கி ரூ13, 500 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.7,000 கோடியையும் அதானி குழுமத்துக்கு கடனாக அளித்துள்ளது. 


அதானி குழுமன் மொத்தம் வாங்கியுள்ள ரூ.2 லட்சம் கோடி கடனில் பல்வேறு வங்கிகள் வழங்கிய கடன் மட்டுமே ரூ.80,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. 


முன்னதாக, அதானி குழுமத்துக்கு வழங்கிய கடன், பாதிப்பு குறித்து அறிக்கை அளிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி உத்தரவை அடுத்து ஒவ்வொரு வங்கியும் அதானி குழுமத்துக்கு வழங்கிய கடன் விவரங்களை வெளியிட்டு வருகின்றன. 


முன்னதாக, அதானி குழுமத்துக்கு வழங்கிய கடன், பாதிப்பு குறித்து அறிக்கை அளிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி உத்தரவை அடுத்து ஒவ்வொரு வங்கியும் அதானி குழுமத்துக்கு வழங்கிய கடன் விவரங்களை வெளியிட்டு வருகின்றன. 


அதானி குழுமம்: 


கடந்த ஜனவரி 24ம் தேதி அதானி குழுமம் குறித்து அமெரிக்காவின் ஷார்ட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிச்ர்ச் வெளியிட்ட அறிக்கை தொடர்ந்து, செபி கடந்த ஒரு ஆண்டு காலத்தில் அதானி குழுமம் செய்த அனைத்து ஒப்பந்தங்களையும் ஆய்வு செய்ததாக அறிவித்தது. 


ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை:


தொடர்ச்சியாக, இந்தியாவில் இயங்கி வரும் உள்நாட்டு வங்கிகளிடம் அதானி குழும நிறுவனங்கள் பெற்ற கடன் தொகை எவ்வளவு என்பது குறித்து ரிசர்வ் வங்கி விவரங்களை கேட்டதாக ராய்ட்டட்ஸ் தெரிவித்துள்ளது. இதன்மூலம்  இந்தியாவில் இத்தனை வங்கிகளில் எவ்வளவு கடன்களை அதானி குழுமம் பெற்றுள்ளது என்பது குறித்து ரிசர்வ் வங்கி அறிய முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஹிண்டன்பர்க் அறிக்கை, செபி அறிவிப்பு, கிரெடிட் சூசி முடிவு ஆகியவற்றிற்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. 


ரூ.20,000 கோடி நிதி திரட்டும் முடிவு வாபஸ்


அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மூலதனம் திரட்டும் நோக்கில், எஃப்.பி.ஓ மூலம் பங்குகளை வெளியிடும் திட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஆனால், ஹிண்டென்பர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கையின் காரணமாக, அதானி நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.


இதன் காரணமாக, எதிர்பார்த்ததை காட்டிலும் மந்தமாகவே அந்நிறுவனத்தின் பங்குகள் விற்பனையாகின.  எஃப்.பி.ஓ முறையில் அதானி நிறுவனத்தின் பங்குகள் ரூ.3,112 விற்பனை செய்யப்பட்டது. ஆனால், பங்குச்சந்தையில் அதன் விலை ரூ.2000 அளவிற்கு சரிந்தது. இதையடுத்து ரூ.20 ஆயிரம் கோடி மூலதனத்தை திரட்டும் நோக்கிலான, எஃப்.பி.ஓ பங்குகளை விற்பனை செய்யும் முடிவை திரும்பப் பெறுவதாகவும், ஏற்கனவே அந்த பங்குகளை வாங்குவதற்கான பணத்தை செலுத்தியவர்களுக்கு, அவர்களுக்கான பணம் திரும்ப வழங்கப்படும் என்றும், அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.


உலக பணக்காரர்கள் பட்டியலில் 15வது இடம்


மத்திய அரசின் பட்ஜெட்டின் தாக்கமாக இந்தியாவின் பங்குச்சந்தையில், அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் கண்டன. ஆனால், அதானி குழுமத்தின் பங்குகள் மட்டும் தொடர்ந்து சரிவையே சந்தித்தன. நேற்றைய நாளில் அவரின் சொத்து மதிப்பு ரூ.6.85 லட்சம் கோடியாக இருந்த நிலையில், நாளின் முடிவில் அது ரூ.6.1 லட்சமாக சரிவடைந்துள்ளதாக போர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது. இதன் மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி 15வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதோடு, ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரர் எனும் பெருமையையும், இந்தியாவின் மற்றொரு முக்கிய தொழிலதிபரான அம்பானியிடம் இழந்துள்ளார்.


மாபெரும் சரிவு ஏன்?:


இந்த வார தொடக்கத்தில் உலகின் டாப் 3 பணக்காரர்களில் ஒருவராக இருந்த இந்தியாவின் கவுதம் அதானி, பங்குச்சந்தையில் ஏற்பட்ட தடாலடி வீழ்ச்சியின் காரணமாக, உலக மெகா கோடீஸ்வரர்கள் வரிசையில் 15வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். சரியான மதிப்பீடு இல்லாவிட்டாலும், கிட்டத்தட்ட பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு சில தினங்களிலேயே அவரது சொத்து மதிப்பில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரது சொத்து மதிப்பு குறைந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி 24ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தது. ஆய்வறிக்கை வெளியிட்ட ஒரு வாரத்திற்குள்ளேயே அதானியின் சொத்து மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டுள்ளது.