அதானி குடும்பத்திற்கு அரசியலுக்கு வர விருப்பமில்லை - அதானி குழுமம்
அதானி குடும்பத்திற்கு அரசியலுக்கு வர விருப்பமில்லை எனவும் அரசியலுக்கு வருவதாக சமூத வளைதளங்களில் வந்து கொண்டிருக்கும் செய்தியானது உண்மைக்கு புறம்பானது என அதான குழுமம் விளக்கமளித்துள்ளது.
செய்திகள் போலியானது:
மாநிலங்களைவைவையில் சில உறுப்பினர்களிகளின் பதவிக்காலம் ஜீன் மாதத்துடன் நிறைவடையவுள்ளது. இதனால் புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யப்படுவதற்காக, தேர்தல் மாநிலங்களவை தேர்தலுக்கான் மனுதாக்கல் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கவுதம் அதானி அல்லது அவரது மனைவி ப்ரீத்தி அதானி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ளதாக செய்திகள் பரவி வந்தன .
அரசியலுக்கு வரப்போவதில்லை:
இச்செய்திகள் பரவி வந்த நிலையில் கவுதம் அதானி, அவரது மனைவி ப்ரீத்தி அதானி மற்றும் அதானி குடுமபத்தினருக்கு அரசியலுக்கு வருவதில் விருப்பம் இல்லை என அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
ட்விட்டரில் விளக்கம்:
இது தொடர்பாக அதானி குழுமம் டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளது, அதில் மாநிலங்களை உறுப்பினர் பதவிக்கு கவுதம் அதானி அல்லது அவர்து ,மனைவி ப்ரீத்தி அதானி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக செய்தி பரவி வருவது எங்களின் கவனத்திற்கு வந்தது. இந்தச் செய்தி முற்றிலும் தவறான தகவலாகும். இது போன்ற செய்திகள் எப்போது எல்லாம் மாநிலங்களை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும் பரவி வருவ்து வாடிக்கையாகியுள்ளாது என தெரிவித்துள்ளது.இதுபோன்ற செய்தி ஊடகங்களில் வருவது துரதிஷ்ட்மானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியில் கட்சியிலும் இணையவும் விருப்பமில்லை:
கவுதம் அதானி, ப்ரீத்தி அதானி ,மற்றும் அதானி குடும்பத்தில் யாருக்கும் அரசியலில் பங்கேற்கும் எண்ணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எந்த அரசியில் கட்சியிலும் இணையவும் விருப்பம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்