நடிகர் சரத்குமார் ஹைதரபாத்தில் உள்ள முதலமைச்சரின் மகள் கவிதாவை நேரில் சந்தித்து பேசினார்.  


தென்னிந்திய சினிமாவில் உள்ள பிரபல நடிகர் மற்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் மற்றும்  தலைவர் சரத்குமார், தெலுங்கானா முதல்வர் கேசிஆரின் மகளான எம்எல்சி கே.கவிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். 


இந்த சந்திப்பில் நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து கவிதாவும் முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரான சரத்குமாரும் நீண்ட நேரம் விவாதித்ததாக ஹைதரபாத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு BRS தமிழகத்திற்குள் நுழையலாம் என்ற அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


BRS என்பது அண்மையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அண்மையில் தனது தெலுங்கான ராஷ்ட்ரா சமதியை பாரத் ராஷ்ட்ரா சமதியாக தேசிய கட்சியாக மாற்றியுள்ளார். இந்த நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர், குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சரத்குமாரின் இந்த சந்திப்பு தமிழ்நாட்டிலும், BRS தொடர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 


முதலில் பாடிபில்டராக இருந்து பின்னர் பத்திரிகையாளரான சரத்குமார் 1986 ஆம் ஆண்டு ’சமாஜம்லோ ஸ்திரீ’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் தனது நடிப்பை தொடங்கினார். தென்னிந்திய நடிகர் சங்கம் என அதிகாரப்பூர்வமாக அறியப்படும் செல்வாக்கு மிக்க நடிகர் சங்கத்தின் (தமிழ் நடிகர் சங்கம்) தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.