Nagarjuna: தனிப்பட்ட குடும்ப விவகாரத்தை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம் என, தெலங்கானா அமைச்சருக்கு நடிகர் நாகர்ஜுனா அறிவுறுத்தியுள்ளார்.


தெலங்கானா அமைச்சர் சொன்ன பகிரங்க குற்றச்சாட்டுகள்:


தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா சொன்ன கருத்து தான், ஆந்திர திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, ” தெலுங்கு திரையுலக நடிகைகளை முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகன் கேடிஆர் பிளாக்மெயில் செய்தார். நடிகைகளை போதைப் பழக்கத்துக்கு பழக்கப்படுத்தியதும் அவர் தான்.. நடிகரும் நாகர்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யா மற்றும் சமந்தா விவாகரத்துக்கு, காரணமும் கேடிஆர் தான்.  நாகார்ஜுனா அண்மையில் இடித்து தள்ளப்பட்ட தனது வணிக வளாகத்தை,  முந்தைய அரசு அகற்றாமல் இருக்க, கேடிஆர் விதித்த சமந்தாவை உள்ளடக்கிய ஒரு நிபந்தனைக்கு  ஒப்புக்கொண்டார். அதனை விரும்பாமலேயே சமந்தா தனது கணவர் நாகசைதன்யாவை பிரிந்தார். நடிகை ரகுல் பிரீத்தி சிங் அவரசமாக திருமண்ம செய்துகொள்ளவும், சந்திரசேகர ராவின் மகன் கேடிஆர் தான் காரணம்” என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.






அமைச்சருக்கு நாகர்ஜுனா கண்டனம்:


இந்நிலையில், அமைச்சர் கோண்டா சுரேகாவின் குற்றச்சாட்டுகளை நாகார்ஜுனா கடுமையாக சாடியுள்ளார். கோண்டா சுரேகாவின் கருத்துக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் திரையுலக பிரபலங்களின் வாழ்க்கையை, உங்களது எதிரிகளை விமர்சிப்பதற்காக பயன்படுத்தாதீர்கள். தயவுசெய்து மற்றவர்களின் தனியுரிமையை மதியுங்கள். பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண்ணாக, எங்கள் குடும்பத்திற்கு எதிரான உங்கள் கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொருத்தமற்றவை மற்றும் தவறானவை” என நாகார்ஜுனா பதிவிட்டுள்ளார். நடிகர்  நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்றுக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


தொடர் சர்ச்சையில் சுரேகா:


கொண்டா சுரேகா கடந்த சில தினங்களாகவே பிஆர்எஸ் கட்சியினர் உடன் கடுமையான கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் கூட, பிஆர்எஸ் கட்சியினர் தன்னை தனிப்பட்ட முறையில் விமர்சித்து அவமானப்படுத்தியதாக அமைச்சர் கொண்டா சுரேகா செய்தியாளர் சந்திப்பில் கண்கலங்கினார். பெண் என்றும் பார்க்காமல் மிக மோசமாக தன்னை விமர்சிப்பதாகவும், பயங்கரமான கருத்துகளை கூறியதாகவும்,  சாப்பாடு கூட சாப்பிட விரும்பவில்லை” என கொண்டா சுரேகா மனமுடைந்து பேசி இருந்தார்.