Go First விமானம் தரையிரங்கும் சமயத்தில் ஏர் கண்டிஷ்னர் முறையாக வேலை செய்யாததால் அதில் பயணம் செய்த பயணிகள் சிலர் மூச்சு திணறலுக்கு ஆளாகியுள்ளனர்.
கோ ஃபர்ஸ்ட் விமானம் :
டேராடூனில் இருந்து மும்பைக்கும் பயணிகளை ஏற்றி வந்த கோ ஃபர்ஸ்ட் விமானம், ( எண் G8 2316 ) தரையிரங்க ஆயத்தமானது அப்போது விமானத்தில் ஏசி சரியாக வேலை செய்யாததால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இது குறித்து ரோஷினி வாலியா என்ற பெண் ட்விட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில் “Go First Airways G8 2316 மிகவும் மோசமான அனுபவங்களில் ஒன்று! ஏசி வேலை செய்யாததால் விமானத்தில் சிலர் மூச்சு திணறலுக்கு ஆளாகினர். ஆனால் அவர்களின் தற்காலிக விடுதலைக்கு விமானத்தில் எந்தவொரு வசதியும் இல்லை.வெளியேறும் வழியில், வியர்த்து சித்தப்பிரமை பிடித்தது போல பயணிகள் இடிந்து விழும் தருவாயில் நின்றுக்கொண்டிருந்தனர். பயணித்தவர்களில் மூவருக்கு அதிக மூச்சு திணறல் ஏற்ப்பட்டது. அவர்கள் மயங்கிவிட்டனர். கேன்சர் நோய்க்காக கீமா சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நோயாளி விமானத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார்.” என தெரிவித்துள்ளார்.
வீடியோ :
வீடியோவில் :
வீடியோவில் மூச்சு விடுவதற்கு சிரமப்படும் பயணிகளுக்கு சக பயணிகள் உதவுவதை காணலாம். சிலர் காற்று வரமால் காகிதங்களை கொண்டு விசிறிக்கொண்டிருக்கின்றனர்.விமானத்தில் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து பெண் பயணி ஒருவர் வீடியோவில் பகிர்ந்துக்கொண்டுள்ளார். அதில் அவர்“ விமானத்துல் ஒரு கேன்சர் நோயாளி இருக்கிறார். ஏர் கண்டிஷனர்கள் செயலிழந்ததால் அந்த பெண்ணுக்கு கிளாஸ்ட்ரோஃபோபிக் இருப்பதாகக் கணவர் கூறுகிறார். மேலும், ஏசிகள் வேலை செய்யவில்லை என்றால் விமான நிறுவனங்கள் விமானத்தை இயக்கியிருக்கவே கூடாது இது "ஒட்டுமொத்த அமைப்பின் அவமானம்" என தெரிவித்துள்ளார்.
விமான நிர்வாகம் பதில் :
இந்த வீடியோ ட்விட்டரில் வைரலானதை தொடர்ந்து , நிர்வாகம் பதிவிற்கு கீழே முழு விவரங்களையும் பகிர்ந்துக்கொள்ளுமாறு கமெண்ட் செய்திருக்கிறது. அதில் “ வணக்கம், எங்களைத் தொடர்புகொண்டதற்கு நன்றி, உங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். தயவுசெய்து உங்கள் PNR, தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை DM மூலம் பகிர்ந்துகொள்ளுங்கள். ” என குறிப்பிட்டுள்ளது.