ABP's Southern Rising Summit: புதிய இந்தியா தொடர்பான தங்களது கருத்துகளை தெரிவிக்கும் விதமாக, பல்துறை பிரமுகர்கள் பங்கேற்கும் ஏபிபி சார்பிலான “தெற்கின் எழுச்சி” எனும் தலைப்பிலான கருத்தரங்கு சென்னயில் இன்று அதாவது அக்டோபர் 12ஆம் தேது நடைபெற்று வருகிறது. 


தெற்கின் எழுச்சி நிகழ்ச்சியில் ரிக்கி கேஜ்


இந்தியாவின் தென் மாநிலங்கள் வளர்ச்சி, நிர்வாகம், கல்வியறிவு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், ஒட்டுமொத்த தேசத்திற்கும் சிறந்த முன்மாதிரியாக உள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் கர்நாடாகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் நிலவும்,  விதிவிலக்கான முன்னேற்றம், கலாச்சார செழுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை கொண்டாடுவதற்கும் ஆராய்வதற்கும், ஏபிபி நெட்வொர்க் 'தி சதர்ன் ரைசிங் சம்மிட் 2023' என்ற கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது. 


பிரமாண்டமாக நடைபெற்று வரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட, இசையமைப்பாளரும் உலகக் புகழ்பெற்ற கிரேமி விருதினை மூன்று முறை வென்ற ரிக்கி கேஜ் பேசியதாவது, ஏபிபி நாடு உருவாக்கிய இந்த மிகப்பெரிய மேடையில் இந்தியாவை பிரதிநிதிதுவப்படுத்துவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பொதுவாகவே இசையை உருவாக்குவது அற்புதமான உணர்வு. இசை மிகவும் சக்தி வாய்ந்த உணர்வாகும். உலகை மிகவும் சிறந்த இடமாக மாற்றுவதற்கு இசையைப் பயன்படுத்தவேண்டும்.  பாலிவுட் சினிமாவில் ஏன் இசையமைக்கவில்லை என்ற கேள்விக்கு, பாலிவுட் சினிமா கலாச்சாரத் தடைகளை உடைக்கவில்லை. பாலிவுட் சினிமா இசை என்பது இசையின் தவறான அடையாளத்தை உருவாக்கியுள்ளது என பதில் அளித்தார். 


மேலும் இந்திய இசையின் அடையாளமாக ஏ.ஆர். ரகுமான் உள்ளார். அவர் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞரின் மனதிலும் ஏதேனும் ஒரு தாக்கத்தினை ஏற்படுதியுள்ளார். இந்தியா முழுவதும் உள்ள இசையமைப்பாளர்கள் ஏதேனும் ஒரு வகையில் ஏ.ஆர். ரகுமானால் ஈர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் இந்தியா பெரிய அளவில் முன்னேறி வருகிறது. காலநிலை மாற்றம் குறித்து இந்தியா அதிக அக்கறையாக உள்ளது என அவர் பேசினார். 




ABP Southern Rising Summit 2023 LIVE: ”பிரபலமாக இருப்பதில் எந்த நன்மையும் இல்லை" - நடிகர் ராணா டகுபதி