ABP's Southern Rising Summit: புதிய இந்தியா தொடர்பான தங்களது கருத்துகளை தெரிவிக்கும் விதமாக, பல்துறை பிரமுகர்கள் பங்கேற்கும் ஏபிபி சார்பிலான “தெற்கின் எழுச்சி” எனும் தலைப்பிலான கருத்தரங்கு சென்னயில் இன்று அதாவது அக்டோபர் 12ஆம் தேது நடைபெற்று வருகிறது. 


இந்தியாவில் பெரும்பாலான ஊடகங்களின் ஆசிரியராக இருப்பது பிரதமர் மோடிதான்


இந்தியாவின் தென் மாநிலங்கள் வளர்ச்சி, நிர்வாகம், கல்வியறிவு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், ஒட்டுமொத்த தேசத்திற்கும் சிறந்த முன்மாதிரியாக உள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் கர்நாடாகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் நிலவும்,  விதிவிலக்கான முன்னேற்றம், கலாச்சார செழுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை கொண்டாடுவதற்கும் ஆராய்வதற்கும், ஏபிபி நெட்வொர்க் 'தி சதர்ன் ரைசிங் சம்மிட் 2023' என்ற கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது. 


இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ்  பேசியதாவது, “ நியூஸ் க்ளிக் செய்தி நிறுவனத்தின் மீது வழக்கு தொடக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான ஊடகங்களின் ஆசிரியராக பிரதமர் மோடிதான் உள்ளார்.  இந்த நிலை தொடர்ந்தால் இதழியல் துறை விரைவில் தீவிரவாதமாக மாறும்  நிலை உருவாகும்” எனக் குறிப்பிட்டு பேசினார்.


அதேபோல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பேசியதாவது,” கடைசி 4, 5 ஆண்டுகளில் பாஜக தமிழ்நாட்டில் அமைப்புரீதியாக வளர்ந்துள்ளது. எங்கள் பூத் கமிட்டிக்கள் வலிமையாக உள்ளன. நாங்கள் நன்றாக செயல்பட்டுக்கொண்டிருக்கும். கடந்த  60 ஆண்டுகளில் திமுக , அதிமுக மிக உறுதியாக இருந்துள்ளது.  கருணாநிதி ஆதரவு அல்லது கருணாநிதி எதிர்ப்பு என்பது தான் இங்கு அரசியல் நிலவரம்.  கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இன்று இல்லை. தமிழ்நாட்டில் பெரும் வெற்றிடம் உள்ளது. பாஜக அதனை நிரப்பும். மாநிலத் தலைவர் அண்ணாமலை இளமையான, துடிப்பானவர். அவரைப் பெற்றுள்ளோம். நாங்கள் 2026இல் ஆட்சியமைப்போம்.  திமுக, அதிமுக தவிர்த்து, தமிழ்நாட்டில்  ஆட்சி அமைப்போம் என்று சொல்ல யாருக்கும் துணிச்சல் இல்லை. பாஜகவுக்கு இந்த துணிச்சல் இருக்கிறது” என பேசினார். 


அதேபோல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் கௌடா, தமிழ்நாட்டில் கால் பதிக்கப்போவதாக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்ததற்கு பதிலளித்த அவர்,  பாஜகவினர் மக்கள் மத்தியில் என்ன புகைக்கிறார்கள் என்று தெரியவில்லை, பாஜக இல்லாத தென்னிந்தியாவை தான் நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம். கர்நாடகாவில் பாஜக 40%  ஊழல் பாஜக அரசு என்று முத்திரை குத்தப்பட்டது. அதுவே அவர்களின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது” எனப் பேசினார்.