தமிழ்நாடு:


1. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகள் குறித்து மத்தியக் குழுவினர் இன்று (22.11.2021) பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட வீராசெட்டி தெரு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை மற்றும் ஜவஹர் நகர் ஆகிய பகுதிகளிலும், ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட அழகப்பா சாலையிலும் மழை வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


2. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைத்து விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து சேலம் மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


3. தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பூசி போட கட்டாயபடுத்த கூடாது என உத்தரவிடக்கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


4. சினிமா திரையரங்குக்குள் நுழைய கொரோனா தடுப்பூசி சான்றிதழ் முக்கியம் என்றும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறைந்த பட்சம் ஒரு டோஸாவது தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி சான்றிதழ் திரையரங்கில் சோதனை செய்யப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 


5. கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து பாரபட்சமின்றி சேவையாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.


இந்தியா:


1. குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அகில இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அசதுத்தீன் ஒவைசி  மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


2. மத்திய பிரதேசம், புர்கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த சோக்கி என்பவர்,  தனது மனைவி மஞ்சுஷா சோக்சேவுக்காக தாஜ்மஹாலைப் போன்ற வீட்டைக்கட்டி பரிசாக அளித்த நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


குற்றம்:


1. கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆய்வு மேற்கொண்ட வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் மீது வாகனம் மோதியத்தில் சிகிச்சை பலனின்றி கனகராஜ் உயிரிழந்தார். 


சினிமா:


1. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல்.எல்.பி இணைந்து தயாரிக்கும் ‘மைக்கேல்’ என்னும் புதிய படத்தில் முதன் முறையாக விஜய் சேதுபதி மற்றும் டோலிவுட் நடிகர் சந்தீப் கிஷன் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக களமிறங்குவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 


2. விக்ரம் பட படப்பிடிப்பு, பிக் பாஸ் படப்பிடிப்பு, அரசியல் கட்சி கூட்டங்கள் என தொடர்ந்து ஆக்டீவாக இயங்கி வந்தவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதாக கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். அவர் தன்னை மருத்துவனையில் தனிமைப்படுத்திக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


3. நடிகை சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் அறிமுகமாகும் சித்திரை செவ்வானம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் நேற்று வெளியிட்டார். இந்தப்படம் மூலம் சாய்பல்லவி குடும்பத்தில் இருந்து மற்றொருவர் சினிமாத்துறையில் கால்பதிக்கவுள்ளார்.


விளையாட்டு:


1. சையத் முஷ்தாக் அலி டி20 தொடரின் இறுதிப்போட்டியில் கர்நாடகா அணியை தமிழ்நாடு அணி வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 


உலகம்:


1. ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தொலைக்காட்சி நாடக தொடர்களில் பெண்கள் நடிக்க தலிபான் அமைப்பு தடை விதித்துள்ளது. 


2. வருகின்ற 24 நவம்பர் அன்று விண்கோளுடன் தனது ஸ்பேஸ்கிராஃப்ட் ஒன்றை மோதச் செய்வதற்கு சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா திட்டமிட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண