100 ஆண்டுகளைக் கடந்த ABP ஊடகத்தின் நூற்றாண்டு விழாவின் 2-ம் கட்ட வெற்றிவிழா ஹைதராபாத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் மற்றொரு முக்கிய அம்சம், ABP டிஜிட்டல் தளத்தின் புதிய வரவான, தெலுங்கு பேசுவோருக்கான ABP தேசம் டிஜிட்டல் தளத்தின் ஓராண்டு நிறைவு விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மக்கள் குரலாக ABP ஊடகம் :
மக்களின் குரலாக கொல்கத்தாவில் தொடங்கி, நாடு முழுவதும் இன்று வரை தொடர்ந்து ஒலித்தும் ஒளித்தும் வருவது ABP ஊடகம். ஆனந்தபஜார் பத்திரிகா என்பதன் சுருக்கமான ABP, தற்போது கிழக்கு இந்தியா, வடகிழக்கு இந்தியா, மேற்கு இந்தியா, வட மேற்கு இந்தியா, வட இந்தியா, தலைநகர் டெல்லி ஆகிய இடங்களில் வீட்டுப்பெயராகவே மாறிவிட்டது.
அந்த அளவுக்கு, மக்களுக்கு களமிறங்கி குரல் கொடுக்கும் ஊடகமாக ABP ஊடகம் உள்ளது.
ABP ஊடகம் - ஓர் தெளிமுகம்:
நாளிதழ், பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி, தற்போது டிஜிட்டல் தளம் என பல பரிமாணங்களோடு, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எப்போதும் துணையாக நிற்கும் இந் நிறுவனத்தின் புதிய வரவுகள்தான், தமிழ் பேசும் ABP நாடுவும், தெலுங்கு பேசும் ABP தேசமும்.
ABP ஊடக சாம்ராஜ்யத்தின் ABP நாடு அண்மையில்தான் தமது ஓராண்டு பயணத்தை முடித்துக் கொண்டு, 2-ம் ஆண்டில் வெற்றிக்கரமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்,தெலுங்கு டிஜிட்டல் தளமான ABP தேசம், தமது 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விழா, ஹைதராபத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஆரம்பமே அமர்க்களம்:
தெலுங்கானா, ஆந்திப்பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் முத்திரைப் பதிக்கும் ABP தேசம் டிஜிட்டல் தளம், அம் மாநிலத்தின் இளம்பெண்களின் அமோக ஆதரவு பெற்றுள்ளதாகவும், வளர்ந்து வரும் முக்கியமான டிஜிட்டல் தளம் என்றும் காம்ஸ்கோர் மதிப்பீடு அளவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஹைதராபாத்தில் கடந்த சனிக்கிழமை ABP நூற்றாண்டு விழா மற்றும் ABP தேசம் ஓராண்டு விழா என இரட்டை விழாக்கள் அர்த்தமுள்ள வகையில் சிறப்பாக நடைபெற்றன. இந்த விழாவில், ABP குழுமத்தின் தலைமை செய்தி ஆசிரியர் அதிதேப் சர்க்கார் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார். அவரோடு, தலைமை செயல் அதிகாரி அவினாஷ் பாண்டே உள்ளிட்ட அந் நிறுவனத்தின் முக்கியத் தூண்கள் அனைவரும் பங்கேற்றனர்.
ஸ்ருதிஹாசன் வாழ்த்துரை:
சிறப்பு விருந்தினராக இந்த சீர்மிகு விழாவில் பங்கேற்ற பன்மொழிகளில் சிறந்த நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நிறுவன தலைமைகளுடன் சேர்ந்து குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். மக்களுக்காக இயங்கும் ABP நிறுவனத்தின் சாதனைகளைப் பாராட்டி, பல வெற்றிகளைக் குவித்திட வேண்டும் என வாழ்த்தினார்.
சிரஞ்சீவியும் அரசியல் தலைவர்களும்:
தெலுங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேசத்தின் பிரபல ஊடகங்களைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்கள், ABP தேசம் டிஜிட்டல் ஊடகத்தின் செய்தியாளர்கள், ஊழியர்கள் என பல நூறு பேர் பங்கேற்ற இந்த விழாவில், ஆந்திராவின் மூத்த அரசியல் தலைவர்கள் காணொலி காட்சியின் மூலம், கடிதம் மூலமும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தெலுங்கு உலகின் பிரபல நடிகரான சிரஞ்சீவி உள்ளிட்ட தெலுங்கு தேசத்தின் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்துக் கொண்டனர்.
விழாவில், தெலுங்கு தேசத்தின் அடையாளமான குச்சிப்புடி நடனமும் முக்கிய சிறப்பாக அமைந்தது. ABP தேசம் டிஜிட்டல் தளத்தின் ஆசிரியர் நாகேஷ்வர ராவ், விழாவில் பங்கேற்ற - வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்