ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, தனது 87வது வயதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார். தேர்ச்சி பெற்ற முன்னாள் முதல்வருக்கு, சிறையில் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் அரசியல்வாதியைப் பற்றிய தஸ்வி திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் அபிஷேக் பச்சன் மற்றும் நிம்ரத் கவுர் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். 


ஹரியனாவின் முன்னாள் முதல்கர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு தற்போது 87 வயது ஆகிறது. அவர் சிறுவயதில் கல்வி கற்கவில்லை. அதனால் 2019ல் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் எழுதினார். எல்லா தாள்களிலும் நல்ல மதிப்பெண் எடுத்த அவரால் ஆங்கிலத்தில் மட்டும் தேர்ச்சி பெறமுடியாமல் போனது. எனவே அவர் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் அந்த தேர்வையும் எழுதினார். ஆனால் அதற்கு முன்னதாகவே 12 வகுப்பு தேர்வுகளை எழுதி முடித்தார். ஆனால் 12 ஆம் வகுப்பு தேர்வுக்கான முடிவுகளை அவருக்கு மட்டும் வெளியிடாமல் தடுத்து வைத்திருந்தது ஹரியானா அரசு. அவரது 10 ஆம் வகுப்பு ஆங்கில பாடத்தை முடிப்பதற்காக காத்திருந்தது.






இந்நிலையில் அந்த ஆங்கில தேர்வுக்கான ரிசல்ட் வெளியானது. அதோடு ஹரியானா அரசு 12 வகுப்பு தேர்வு ரிசல்டையும் வெளியிட்டது. பத்தாம் வகுப்பு ஆங்கில பாடத்தில் 100க்கு 88 மதிப்பெண் எடுத்து பாசானார். இந்த நிலையில் வெளியான 12 வகுப்பு தேர்வு முடிவுகளில், அவர் எல்லா தாள்களிலும் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். ஹரியானா கல்வி வாரிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சண்டிகரில் அவருக்கு மதிப்பெண் பட்டியலை வழங்கினர்.


முன்னாள் முதல்வர் 87 வயதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளை எப்படி முடித்தார் என்பது பற்றிய செய்திக் கட்டுரையைப் பகிர்ந்த, நிம்ரத் கவுர், "நிச்சயமாக அற்புதம்!! வயது என்பது வெறும் எண் என்று நிரூபித்துள்ளார்." என்று எழுதி ட்விட்டரில் பகிர்ந்தார். அபிஷேக் பச்சன் ஒரு கட்டுரையைப் பகிர்ந்து ட்வீட் செய்துள்ளார், "வாழ்த்துக்கள்!!! #தாஸ்வி", என்று அதில் எழுதி உள்ளார்.






ஒரு ரசிகர் அபிஷேக்கின் ட்வீட்டுக்கு 'இது உங்கள் படம்தான்' என்று ரிப்பிளை செய்திருந்தார். அபிஷேக்கின் தஸ்வி திரைப்படம் கடந்த மாதம் நெட்ஃபிக்ஸ் இந்தியா மற்றும் ஜியோ சினிமாவில் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தில் அவர் கங்கா ராம் சௌத்ரியாக நடித்துள்ளார். அதில் அவர் ஒரு படிக்காத, ஊழல் செய்யும் அரசியல்வாதியாக நடித்துள்ளார், அவர் சிறையில் தனது 10 ஆம் வகுப்பு பள்ளி படிப்பை முடிப்பதுதான் கதையாக சொல்லப்பட்டிருந்தது. துஷார் ஜலோட்டா இயக்கிய, தஸ்வி திரைப்படத்தில் நிம்ரத் கவுர் பிம்லா தேவியாக நடித்துள்ளார், அவர் சிறையில் இருக்கும் போது அவரது முதல்வர் இருக்கையை கைப்பற்றுகிறார். யாமி கெளதம் ஒரு ஸ்ட்ரிக்ட்டான ஜெயிலராகவும், ஜோதி தேஸ்வால் ஐபிஎஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளார். இதை தினேஷ் விஜன் தனது மேடாக் பிலிம்ஸ், ஜியோ ஸ்டுடியோஸ், பேக் மை கேக் பிலிம்ஸ் ஆகியவற்றின் கீழ் தயாரித்துள்ளார்.