சமீபத்தில், பாலிவுட் நடிகர்கள் ஆமிர் கான், கியாரா அத்வானி ஆகியோர் இணைந்து வங்கி விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தனர். சமூக வலைதளங்களில் இந்த விளம்பரம் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், மத உணர்வுகளை புண்படுத்தும் விளம்பரங்கள் மற்றும் செயல்களில் இருந்து ஆமீர் கான், விலகி இருக்க வேண்டும் என மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா இன்று தெரிவித்துள்ளார்.






இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆமீர் கான், "இந்திய மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களை மனதில் வைத்து ஆமீர் கான் இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க வேண்டும்" என்றார்.


விளம்பரத்தில் புதுமண தம்பதிகளாக நடித்திருக்கும் ஆமீர் கான் மற்றும் அத்வானி, கல்யாண மண்டபத்திலிருந்து வீட்டிற்கு திரும்புகின்றனர். அப்போது, மணப்பெண், தனது வீட்டிலிருந்து மாப்பிள்னை வீட்டிற்கு செல்லும் நிகழ்வில் இருவரும் அழவில்லை என்பது குறித்து பேசுகின்றனர்.


இதையடுத்து, புது மண தம்பதியினர், மணப்பெண்ணின் வீட்டிற்கு செல்கின்றனர். அந்த சமயத்தில், மாப்பிள்ளை வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கிறார். பொதுவாக, பாரம்பரியமாக மணப்பெண்னே வீட்டிற்குள் முதல் நுழைவார். 


இது தொடர்பாக விரிவாக பேசிய மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் மிஸ்ரா, "தனியார் வங்கி ஒன்றுக்காக நடிகர் ஆமீர்கான் நடித்த விளம்பரம் குறித்து புகார் எழுந்ததையடுத்து அதை பார்த்தேன். இந்திய மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களை மனதில் வைத்து இதுபோன்ற விளம்பரங்களைச் நடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


நான் அதை பொருத்தமாக கருதவில்லை. இந்திய பாரம்பரியம், பழக்கவழக்கங்கள் மற்றும் தெய்வங்கள் பற்றி குறிப்பாக ஆமீர் கான் நடித்த இதுபோன்ற விஷயங்கள் தொடர்ந்து எழுகின்றன. இத்தகைய செயல்களால் ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் உணர்வுகள் புண்படுத்தப்படுகின்றன. யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த அவருக்கு உரிமை இல்லை என்று நான் நம்புகிறேன்" என்றார்.


இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்த ஜோமேட்டோ விளம்பரத்தில் சர்ச்சை வெடித்தது. இதைத் தொடர்ந்து அந்நிறுவனம் விளம்பரத்தை திரும்பப் பெற்றது.