மழைக்காலம் என்றாலே நம்மூர் சாலைகள் கடலாக மாறிவிடும். அந்த அளவிற்கு அதன் கட்டமைப்பு வசதிகளும், பராமரிப்பும் இருக்கும். உத்திரபிரதேசம் , லக்னோ உள்ளிட்ட வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. புதுடெல்லியில் மெட்ரோ பணிகள் நடந்து வருவதாலும், சாலைகள் சரியாக சீரமைப்பு பணிகள், கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தில் கொஞ்சம் நேர மழைக்கே சாலைகளில் நீர் தேங்கிவிடும். இதனால், சாலையில் நடப்பவர்களுக்கும் சிரமம்; போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதெல்லாம் கூட பரவாயில்லை. ஆனால், சாலைகளில் தேங்கியிருக்கும் நீர் காரணமாக, பல்வேறு பணிக்களுக்காக தோண்டப்படும் குழிகள், மூடப்படாமல் திறந்திருக்கும் பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால்கல் உள்ளிட்டவைகளில் விழும் அபாயம்தான் அதிர்ச்சயளிப்பதாய் இருக்கும்.






அப்பகுதியில் பெய்த மழை காரணமாக சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. வாகனங்கள் கடலில் கப்பல் செல்வது போல் டயர்கள் தெரியாத வண்ணம் ஊர்ந்து செல்கின்றன. அப்படி, தம்பதியர் ஸ்கூட்டியில் பயணித்து கொண்டிருந்தனர். நடைபாதைக்கு ஓரமாக வண்டியை திருப்பியபோது, அங்கிருந்த திறந்திருந்த மழைநீர் வடிகால் தொட்டியின் உள்ளே பைக்கோடு மூழ்கிவிட்டனர். அந்த பள்ளம் நல்ல ஆழமாக இருந்ததால், ஸ்கூட்டி முழுவதும் நீரில் மூழ்கிவிட்டது. இருவரும், தண்ணீரில் தத்தளித்தனர். அருகில் இருந்த மக்கள்  அவர்களை தண்ணீர்ல் இருந்து காப்பாற்றி உள்ளனர். 


இருவரும் திடீரென குழியில் விழுந்து தண்ணீர்ல் மூழ்கி தத்தளித்துவிட்டனர். மழைக்காலங்களிலாவது இப்படி உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகள் நடக்காமல் இருக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண