சமீப காலத்தில் இந்தியாவில் எவை சட்டப்பூர்வமானது, எவை சட்ட விரோதமானது என்பதில் அதிகளவில் குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், தேசவிரோதச் சட்டம், அரசை விமர்சிப்பது, கருத்து சுதந்திரம் முதலான விவகாரங்கள் பேசப்படும் போதெல்லாம் சர்ச்சைகளும் தோன்றி விடுகின்றன. இந்த விவகாரங்கள் குறித்து நாம் இப்போது பேசி வந்தாலும், இந்தியாவில் நாம் அன்றாடம் பார்க்கும், மேற்கொள்ளும் பல்வேறு விவகாரங்கள் சட்டத்தின் அடிப்படையில் சட்ட விரோதமானவை. 


இந்தியாவில் எவையெல்லாம் சட்ட விரோதமானவை? இங்கே கொடுத்திருப்பவற்றைப் பாருங்கள்... 


1. அனுமதியின்றி பட்டத்தைப் பறக்க விடுவது


இந்திய விமானச் சட்டம் 1934 என்ற சட்டத்தின்படி, விமானத்தைப் பறக்கச் செய்து ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதே உரிமம் பட்டம் பறக்க விடுவதற்கும் பொருந்தும். 


2. டெல்லியில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் ஏற்படும்போது, அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க முரசு ஒலிக்காமல் இருப்பது. 


கிழக்கு பஞ்சாப் விவசாயப் பயிர்ப் பூச்சிகள், நோய்கள், ஆபத்தான களைகள் சட்டம் 1949 என்ற சட்டத்தின் அடிப்படையில் டெல்லி நகரத்தில் வெட்டுக்கிளி தாக்குதல் ஏற்படும் போது, அதிகாரிகளுக்கு முரசு ஒலித்து அறிவிப்பு மேற்கொள்ளாவிட்டால், உங்கள் மீது 50 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 



3. பாலியல் தொழில் சட்டப்பூர்வமானது; பாலியல் தரகு சட்ட விரோதமானது. 


இந்தியாவில் சில நகரங்களின் சிவப்பு விளக்குப் பகுதிகள் இயங்கி வருவதன் பின்னணியில் இந்தக் காரணமே மையமாக உள்ளது. இந்தியாவில் பாலியல் தொழில் மேற்கொள்பவர்களிடம் பணம் வழங்குவதற்கு அனுமதி உண்டு, அதே வேளையில் பாலியல் தொழில் குறித்த தரகர்களுடன் பேசினாலோ, அதில் ஈடுபட்டாலோ அது சட்ட விரோதமானது. 


4. தற்கொலைக்கு முயல்வது சட்டப்படி குற்றம். எனினும், தற்கொலை சரியாக நிகழ்ந்துவிட்டால், இது பொருந்தாது (இது சமீபத்தில் நீக்கப்பட்டது)


இ.பி.கோ 309ஆம் சட்டப்பிரிவின்படி, தற்கொலை செய்ய முயற்சி எடுப்பது சட்டப்படி குற்றமாகும். இதன் காரணமாகவே, மணிப்பூர் போராளி ஐரோம் ஷர்மிளா வலுக்கட்டாயமாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, வலுக்கட்டாயமாக உணவு வழங்கப்பட்டார். எனினும், அவரின் உறுதியைக் குலைக்க முடியவில்லை. ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு எதிரான அவரது போராட்டம் இன்றும் தொடர்ந்து வருகிறது. 


5. 10 ஜோடிகளுக்கு மேல் ஒரே மேடையில் நடனம் ஆடுவது சட்டவிரோதமானது


பொழுதுபோக்கு இடங்களுக்கான உரிமம் வழங்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் சட்டம் 1960 என்ற சட்டத்தின்படி, ஒரே மேடையில் 10 ஜோடிகளுக்கு மேல் நடனம் ஆடினால், ஜோடிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்; அல்லது அந்த நிகழ்ச்சியையே முழுவதுமாக நிறுத்திவிட வேண்டும். 



6. 10 ரூபாய்க்கு அதிகமாக பாதையில் கண்டு எடுக்கப்பட்டால், அதுகுறித்து முறையிடாமல் இருப்பது குற்றம்!


புதையல் சேமிப்புச் சட்டம் 1878 என்ற சட்டத்தின்படி, நாம் கண்டுபிடிக்கும் எந்த புதையலும் இங்கிலாந்து ராணிக்குச் சொந்தம். எனினும் இது 10 ரூபாய்க்கு அதிகமான தொகையையே குறிக்கும். அதற்கும் கீழான தொகை என்றால் நீங்கள் வைத்துக் கொள்ளலாம். 


7. வாய்வழிப் புணர்ச்சிக்குத் தடை


இந்தியாவில் 377வது சட்டப்பிரிவின்படி, இயற்கைக்கு எதிரான பாலுறவு அனைத்தும் குற்றம் ஆகும்; அதில் வாய்வழிப் புணர்ச்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் இது ஒத்துவராது