ஏப்ரல் 20,2023ல் புது வகையான மாறுபட்ட சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இது hybrid solar eclipse என அழைக்கப்படுகிறது. இந்த மாறுபட்ட சூரிய கிரகணம் என்பது வளைய மற்றும் முழு சூரிய கிரகணத்தின்  கலவையே ஆகும். இந்த கிரகணம் பார்ப்பதற்க்கு, சில நொடிகள் வரை நெருப்பு வளையமாக தோன்றும். சிலர் இதனை ring of fire  என கூறுவார்கள்.


சூரிய கிரகணம்:


சூரிய கிரகணம் என்பது பூமி, நிலா, சூரியன் ஆகிய மூன்றும்  ஒரே நேர்க்கோட்டில் வருவது தான், அதாவது நிலவு பூமி மற்றும் சூரியன் இடையே வரும் போது சூரியனை மறைக்கும். இது முழு சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம் மற்றும் வளைய சூரிய கிரகணம் என மூன்று வகையாக தோன்றும்.


அந்த வகையில் ஏப்ரல் 20 அன்று நிகழும் சூரிய கிரகணம் Ningaloo சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது இந்தியாவில் தெரியாது என்றும் மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து நேரடி ஒளிபரப்பு மூலம் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எப்போது தெரியும்?


இந்த ஹைபிரிட் சூரிய கிரகணம் என்பது பார்வையாளரின் இருப்பிடத்தைப் பொறுத்து வளைய கிரகணம் அல்லது முழு கிரகணமாக தோன்றும். வளைய கிரகணத்தின் போது, ​​சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காது, அதன் விளைவாக, சூரியன் பாதி மறைந்தது போல் தோன்றும்.  மேற்கு ஆஸ்திரேலியா அரசாங்கத்தின் கூற்றுப்படி, ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள எக்ஸ்மவுத்தில் (Exmouth) மட்டுமே இந்த ஹைபிரிட் சூரிய கிரகணம் முழு சூரிய கிரகணமாக தோன்றும்.


Exmouth இல், பகுதி சூரிய கிரகணம் 6.04 AM AWST முதல் 9.02 AM AWST வரை இருக்கும்  (இந்திய நேரப்படி 3.34 AM IST முதல் 6.32 AM IST வரை) கிட்டத்தட்ட 3 மணி நேரம் தெரியும். ஆனால் முழு சூரிய கிரகணம் என்பது 7.29 AM AWST முதல் 7.30 AM AWST (4.29 AM IST முதல் 4.30 AM IST வரை) வரை மட்டுமே தெரியும், அதாவது ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே இருக்கும்.


இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் 20 ஏப்ரல் 2023 அன்று நிகழும். அன்று பகுதி சூரிய கிரகணம் தான் தோன்றும். அடுத்த சூரிய கிரகணம் அக்டோபர் 14, சனிக்கிழமையன்று நிகழும். ஆஸ்திரேலியா, கிழக்கு மற்றும் தெற்காசியா, பசிபிக் பெருங்கடல், அண்டார்டிகா மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் இருந்து இந்த அரிய சூரிய கிரகணம் தெரியும்.


நெருப்பு வளைய சூரிய கிரகணம்:


ஹைபிரிட் சூரிய கிரகணத்தின் போது, ​​'ஆண்டுதோறும் நெருப்பு வளைய' கிரகணம் இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் சில வினாடிகள் தெரியும் ஆனால் நிலப்பகுதியில் தென்படாது. மறுபுறம், Space.com படி, எக்ஸ்மவுத், மேற்கு ஆஸ்திரேலியா, திமோர் லெஸ்டே மற்றும் மேற்கு பப்புவா உள்ளிட்ட பகுதிகளில்  மட்டுமே முழு கிரகணம் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சூரிய கிரகணத்தை பாதுகாப்பாக பார்ப்பது எப்படி?


தொலைநோக்கியைப் பயன்படுத்தி பார்க்கலாம்.சூரிய கிரகணத்தைக் காண, பிளாக்சி பாலிமர், அலுமினிஸ்டு மைலார் போன்ற கண் வடிகட்டிகள் அல்லது வெல்டிங் கிளாஸைப் பயன்படுத்தி காணலாம். இருப்பினும், கிரகணத்தை நேரடியாகப் பார்ப்பது பாதுகாப்பானது அல்ல.