தமிழ்நாடு:



  • நம் வரலாற்றை அடுத்த தலைமுறையினரிடம் நகர்த்த வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் - ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் குறித்து ஆலோசனை 

  • காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.,வுமான திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணம் 

  • அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டவரா? - உச்சநீதிமன்றம் கேள்வி

  • ரூ.15,610 கோடி தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் 

  • பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கேள்வி கேட்ட செய்தியாளரிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாக்குவாதம் - சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம்

  • பொங்கல் பரிசுத் தொகுப்புடன் அறிவிக்கப்பட்ட ரூ.1000 நேரடியாகவே வழங்கப்படும் - அமைச்சர்கள் பெரிய கருப்பன், சக்கரபாணி கூட்டாக பேட்டி 

  • சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்ட தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் கையெழுத்திட மறுப்பது ஏன்? - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி 


இந்தியா:



  • உடல்நலக்குறைவு காரணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி 

  • சபரிமலையில் அலைமோதும் கூட்டம் - பம்பை நதி முதல் சன்னிதானம் வரை பக்தர்கள் சமையல் செய்ய தடை 

  • உலகின் உயரமான போர்முனையாக உள்ள சியாச்சினில் முதல் பெண் ராணுவ அதிகாரி நியமனம்

  • கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் இம்மாதம் வெளியாகும் - சித்தராமையா தகவல் 

  • மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் மீது 2வது நாளாக மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் - என்ஐஏ விசாரணைக்கு பாஜக கோரிக்கை 


உலகம்:



  • பாகிஸ்தானில் சிலிண்டர் தட்டுப்பாடு: பிளாஸ்டிக் பைகளில் கியாஸ் நிரப்பி செல்லும் பொதுமக்கள்

  • சவுதி அரேபியாவில் கனமழை - மெதினா நகரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 2 பேர் பலி 

  • ராணுவ ஆட்சி நடக்கும் மியான்மரி 75வது சுதந்திர தின  கொண்டாட்டம் - பாதுகாப்பு படையின் அணிவகுப்பை ஏற்ற ராணுவ தளபதி

  • 2.5 லட்சம் ட்விட்டர் கணக்குகளை முடக்க அமெரிக்க அரசு வலியுறுத்தியது - சிஇஓ எலான் மக்ஸ் தகவல்


விளையாட்டு:



  • கார் விபத்தினால் டேராடூன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் மும்பைக்கு மாற்றப்படுகிறார்.

  • ரஞ்சி கோப்பை: மும்பை அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 41 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து 39 ரன் முன்னிலை பெற்றுள்ளது.

  • கொல்கத்தா மைதானத்தில் பிசி போடர் என்று பொதுவாக அழைக்கப்படும் பெங்கால் அணியின் முன்னாள் கேப்டன் பிரகாஷ் சந்திர போடார், தனது 82வது வயதில் சமீபத்தில் காலமானார்.