தமிழ்நாடு:




  • ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்க்க உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு



  • அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர். ராமசந்திரன் திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

  • ஆன்லைன் ரம்மி தடை சட்டம் ; தமிழக ஆளுநருடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சந்தித்து பேச்சு, மேலும் ஆளுநரின் சந்தேகங்கள் தீர்ந்த பின்னர் நிரந்தர சட்டத்துக்கு ஒப்புதல் வழங்குவார் எனவும் தகவல். 

  • முன்னாள் அமைச்சர் சொத்துக்களை விற்ககூடும் என்பதால் தான் முடக்கினோம் என வருமானவரித்துறை உயர்நீதிமன்றத்தில் விளக்கம். 

  • ராமநாதபுரத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு உரம் கடத்த முயன்ற, 2 பேரை கடலோர காவல் குழுமம் பிடித்து விசாரணை நடத்தி வருகிறது.

  • திருவாரூரில் பயனாளருக்கு புதிய மடிக்கணினி வழங்க வேண்டும் என்பதுடன் 2 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் லெனோவா நிறுவனத்திற்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

  • தமிழ்நாட்டில் முதல் முறையாக சர்வதேச புத்தகக் கண்காட்சி ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் 40 நாடுகள் பங்கேற்க உள்ளன. 

  • திமுக அரசைக் கண்டித்து நாளை, கோவையில்  முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில்  அதிமுக ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளது. 

  • அடுத்த 3 மணி நேரத்திற்குள் தமிழகத்தின் 26 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியா:



  • குஜராத் முதற்கட்ட வாக்குப்பதிவில் 57.60 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 

  • இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 291 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

  • இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், 33 வாக்குச்சாவடிகளை இளைஞர்கள் நடத்துகின்றனர் என்று தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.

  • எல்லை பாதுகாப்பு படை எழுச்சி தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

  • விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி கோபுரங்கள் அமைக்க தடை விதித்து மத்திய தொலைத்தொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது. 

  • கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் டிசம்பர் 26-ம் தேதியை அரசு விடுமுறையாக அறிவித்து மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.


உலகம்:



  • உக்ரைனில் ரஷ்யா செய்த போர்க்குற்றங்களை முறையாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

  • சீனாவின் முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமின் காலமானார்.

  • இந்தியாவுடனான உறவில் தலையிடாதீர்கள் - அமெரிக்காவுக்கு சீனா அதிரடியாக மிரட்டல் விடுத்துள்ளது.

  • இந்தியாவில் ஆண்டுக்கு 20 கோடி பேர் கொடிய வெப்ப அலைக்கு ஆளாக நேரிடும்: உலக வங்கி அதிர்ச்சி தகவல்


விளையாட்டு:



  • பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது  டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் நாளில் நாளில் 506 ரன்கள் குவித்து உலக சாதனை. களமிறங்கிய 6 வீரர்களில் 4 பேர் சதம் அடித்து அசத்தல். 

  • இந்தியா- வங்காளதேசம் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி வருகிற 4ம் தேதி தொடங்கிறது. 

  • ஃபிபா கால்பந்து போட்டியில் இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்கிய குரோஷியா பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான போட்டி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 

  • மற்றொரு போட்டியில் கனடா மொராக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியில் மொரோக்கோ இரண்டு கோல்கள் அடித்துள்ளது. 


குரூப் ஈ


(ஜப்பான் - ஸ்பெயின்) காலீபா சர்வதேச மைதானம்  நள்ளிரவு 12.30 மணி 


(கோஸ்டாரிகா - ஜெர்மனி) அல் பயாத் மைதானம் நள்ளிரவு 12.30 மணி