ரவீந்திரநாத் தாகூர்:




புகழ்பெற்ற இந்தியக் கவிஞரும், இசைக்கலைஞரும், ஓவியருமான ரவீந்திரநாத் தாகூருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு "அவரது ஆழ்ந்த உணர்திறன், புதிய மற்றும் அழகான கவிதைக்காக" 1913 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இதயடுத்து, முதல் நோபல் பரிசு பெற்ற இந்தியர் என்ற பெருமைக்குரியவரானார். வங்காளத்தின் பார்ட் என்றும் குருதேவ் என்றும் அழைக்கப்படும் தாகூர் இந்தியாவின் மிகச் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராவார். அவர் இந்தியா மற்றும் பங்களாதேஷின் தேசிய கீதங்களை இயற்றினார், மேலும் இலங்கையின் தேசிய கீதம் அவரது கவிதைகளிலிருந்து ஈர்க்கப்பட்டதாக நம்பப்படுகிறது. தாகூரின் பாடல்கள், கவிதைகள், நாவல்கள் மற்றும் கட்டுரைகள் இப்போது வழிபாட்டு பாடலாக உள்ளன.


அன்னை தெரசா:




மாசிடோனியா குடியரசில் பிறந்த அன்னை தெரசா தனது 19வது வயதில் இந்தியாவுக்கு குடிபெயர்ந்து, இந்திய குடியுரிமை பெற்றார்.. ரோமன் கத்தோலிக்க கன்னியாஸ்திரியாகவும், "ஏழைகளில் மிகவும் வறியவர்களுக்கு" சேவை செய்யும் ஒரு மிஷனரியாகவும், அவர் தனது வாழ்நாள் முழுவதையும் கழித்தார். அவரது மனிதாபிமானப் பணி மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியை நிறுவ வழிவகுத்தது. ஏழைகளின் மேசியா மற்றும் இறக்கும் தருவாயில் இருந்தவர்களின் மேசியா என்ற அவரது நற்பெயர், உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் உதவியைக் கொண்டுவந்து 1979 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றது. அவர் இறந்த 19 ஆண்டுகளுக்குப் பிறகு, 2016 ஆம் ஆண்டில் ரோமானிய திருச்சபையால் புனிதர் பட்டம் பெற்றார்.


சி.வி.ராமன்:


இந்தியாவில் புகழ் பெற்ற அறிவியல் அறிஞரான சி.வி.ராமன்., ராமன் விளைவுகள் மூலம் நோபல் பரிசு பெற்று நாட்டிற்கு பெருமை தேடித் தந்தது மட்டுமல்லாமல் அறிவியலுக்கு புதிய பாய்ச்சலையும் ஏற்படுத்தித் தந்தார். 1888ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள திருச்சியில் சி.வி.ராமன் பிறந்தார். 1907ம் ஆண்டு சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பை ராமன் முடித்தார். தொடர்ந்து நிதித்துறை தேர்வு எழுதி முதலிடம் பெற்ற அவர், கொல்கத்தாவில் உள்ள கணக்குத் துறை தலைமை அலுவலகரானார்.




நிதி துறையில் பணி செய்த போதும் தனது அறிவியல் ஆர்வத்தால், ராமன் தனது வீட்டிலேயே, அறிவியல் ஆய்வகம் ஒன்றை உருவாக்கி, தினமும் பெரும்பாலான நேரத்தை அங்கேயே கழித்தார். பல்வேறு சோதனைகளை மேற்கொண்ட சர்.சி.வி.ராமன் ஒளிச்சிதறல் பற்றி பலவற்றை தாண்டி ராமன் விளைவை 1928ம் ஆண்டு கண்டறிந்தார். இதற்காக அவருக்கு 1930ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.


இவரின் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை பாராட்டி ஆங்கிலேய அரசு சர் பட்டம் வழங்கியது. ஆனால் தன்னுடைய பெயரின் முன் அந்த பட்டத்தை உபயோகம் செய்ய விரும்பவில்லை. மேலும் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்ட ராமன் தனது விடாமுயற்சியில் 1943ம் ஆண்டு தன்னுடைய பெயரில் ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கினார்.  தனது 82 வயது வரை தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டே இருந்த ராமர் 1970 ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு பிரிந்தார். இயற்பியல் துறை இருக்கும் வரை வாழ்ந்துக் சி.வி ராமன் இருந்து கொண்டே இருப்பார்.


சந்திரயான் -1




சந்திரயான் -1 விண்கலம் செப்டம்பர் 2009 இல் நிலவில் நீர் இருப்பதை முதன் முதலில் நிரூபித்தது. சந்திர நீர் கண்டுபிடிப்புக்கு சந்திரயான் மிஷன் தான் காரணம் என்று கூறப்படுகிறது.


மங்கள்யான்




இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செப்டம்பர் 24, 2014 அன்று செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வந்த மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டு, தகவல்களை மங்கள்யான் வழங்கி வருகிறது, உலகில் குறைந்த செலவில்(450 கோடி) செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் திட்டம் என புகழும் பெற்றுள்ளது.