ரவீந்திரநாத் தாகூர்:


புகழ்பெற்ற இந்தியக் கவிஞரும், இசைக்கலைஞரும், ஓவியருமான ரவீந்திரநாத் தாகூருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு "அவரது ஆழ்ந்த உணர்திறன், புதிய மற்றும் அழகான கவிதைக்காக" 1913 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இதையடுத்து, முதன் முதலில் நோபல் பரிசு இந்தியர் என்ற பெருமைக்குரியரானார். வங்காளத்தின் பார்ட் என்றும் குருதேவ் என்றும் அழைக்கப்படும் தாகூர் இந்தியாவின் மிகச்சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராவார்.


இவர் இந்தியா மற்றும் பங்களாதேஷின் தேசிய கீதங்களை இயற்றினார், மேலும் இலங்கையின் தேசிய கீதம் அவரது கவிதைகளிலிருந்து ஈர்க்கப்பட்டதாக நம்பப்படுகிறது. தாகூரின் பாடல்கள், கவிதைகள், நாவல்கள் மற்றும் கட்டுரைகள் இப்போது வழிபாட்டு பாடலாக உள்ளன. தாகூரின் 'அச்சம் இல்லாத மனம் எங்கே' என்ற கவிதைத் தொகுப்பும், 'கீதாஞ்சலி' என்ற கவிதைத் தொகுப்பும் பிரபலமான படைப்புகளாகும். இந்தியாவின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 'ஜன கண மன' மற்றும் இப்போது பங்களாதேஷின் தேசிய கீதமான 'அமர் ஷோனர் பங்களா' ஆகியவற்றை எழுதியதற்காகவும் அவர் அறியப்படுகிறார். இவர் பாடல்கள் மக்களிடையே சுதந்திர  போராட்ட உணர்வை மேலோங்க செய்தன.


சரோஜினி நாயுடு:


கவிக் குயில் என அழைக்கப்படும் சரோஜினி நாயுடு,1879 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13 ஆம் வங்காளத்தில் பிறந்தார்.சுதந்திர போராட்ட வீரராக மட்டுமல்லாமல், கவிஞராகவும் எழுத்தாளராகவும், சுதந்திர போராட்ட வீரராகவும், சமூக ஆர்வலராகவும் திகழ்ந்தார். கவி வல்லமை படைத்தவர்  என்பதால் இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படுகிறார்.


1905 ஆம் ஆண்டு வங்காளத்தை, ஆங்கிலேயர்கள் இரண்டாக பிரித்ததை  எதிர்த்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார். மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட சரோஜினி நாயுடு, ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் , உப்புச் சத்தியாகிரகம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டார். உப்புச் சத்தியாகிரக போராட்டத்தில் காந்தி தண்டி கடற்கரையில் எடுக்கப்பட்ட உப்பை சரோஜினி நாயுடுவின் கையில் கொடுத்தார். அதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு சில மாதங்களுக்கு பின் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் போராட்டத்தில் பங்கேற்றமைக்காக 21 மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டார். இந்தியா சுதந்திரம் கிடைத்த பின் உத்தர பிரதேசத்தின் ஆளுநராக  பொறுப்பேற்றார். சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையும் பெற்றார். அவரை போற்றும் வகையில், அவரின் பிறந்த நாள் இந்தியாவின் மகளிரி தினமாக கொண்டாடப்படுகிறது.


ஷியாம்லால் குப்தா




பர்ஷத் என்று பிரபலமாக அறியப்படும் ஷியாம்லால் குப்தா,இந்தியாவின் கொடிப் பாடலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 'ஜந்தா உஞ்சா ரஹே ஹுமாரா' என்ற பாடலை எழுதியதன் மூலம் நன்கு அறியப்பட்டவர். இன்றளவும் கொடியேற்று விழாக்களின் போது இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மிகுந்த பெருமிதத்துடனும், தேசபக்தியுடனும் இப்பாடலைப் பாடுகின்றனர். கவிஞரும் பாடலாசிரியருமான ஷியாம்லால் குப்தாவுக்கு 1969 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. பின்னர், 1997 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கத்தால் அவரது நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.


ஹஸ்ரத் மோகனி




இந்திய சுதந்திர இயக்கத்தின் போது 'இன்குலாப் ஜிந்தாபாத்!' என்ற பிரபலமான கோஷம், ஹஸ்ரத் மோகனி என்ற கவிஞரால் எழுதப்பட்டது. அவர் முக்கியமாக காதலைப் பற்றி பாடல்கள் எழுதியுள்ளர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிறுவனர்களில் இவரும் ஒருவர்.


பாரதியார்:




தமிழ்நாட்டைச் சேர்ந்த மகாகவி பாரதியார், கவிஞராகவும், சுதந்திரப் போராட்ட வீரராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்தார். தேசபக்தி, பக்தி மற்றும் ஆன்மீகம் குறித்த பல  பாடல்களை  இயற்றியுள்ளார்


இந்திய சுதந்திர இயக்கம், தேசபக்தி, தேசியவாதம் தொடர்பாக பல பாடல்களை இயற்றியதால், அவர் ஒரு தேசிய கவிஞராகக் கருதப்பட்டார். சுதந்திர இந்தியாவுக்கான தனது தொலைநோக்கு பார்வையையும், தனது பாடல்களில் கோடிட்டுக் காட்டினார்.