குஞ்சன் சக்சேனா:


1999 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்ற கார்கில் போரில், களத்துக்கே சென்ற முதல் பெண்மணி குஞ்சன் சக்சேனா. 1975 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர், இயற்பியல் துறையில் பட்டம் பெற்றார். பின்னர் அவரின் தந்தை ராணுவத்தில் பணி புரிவதை பார்த்து, தானும் நாட்டுக்காக பங்களிப்பை அளிக்க வேண்டும் என விரும்பினார்.




அவரின் திறமையால் இந்திய விமானப்படையில் சேர்ந்து விடுகிறார். கார்கில் போரில், போர் நடைபெற்ற களப்பகுதிக்கே சென்று, வீரர்களுக்கு உதவி புரிகிறார். அப்போது நடைபெற்ற போரில் காயமடைந்த வீரர்களை மீட்டு பலரின் உயிரை காப்பாற்றினார். பின்னர் 2004 ஆம் ஆண்டு பெண்களுக்கு நிரந்தரமாக பணிபுரிய வாய்ப்பு இல்லாததால் 8 ஆண்டுடன் அவரின் விமானப்படையுடனான பயணம் நிறைவு பெற்றது. இவரை கவுரவிக்கும் வகையில், உத்தரப் பிரதேச அரசு, சௌரியா வீர் விருதை வழங்கியது. மேலும் இவரின் வீர செயல்களை பிரதிபலிக்கும் வகையில் குஞ்சன் சக்சேனா – தி கார்கில் என்ற இந்தி திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி மக்களிடையை பெரும் வரவேற்பை பெற்றது.


பிபின் ராவத்:


இந்தியாவின் முதலாவது பாதுகாப்பு படைகளின் தலைமை படைத்தவராக நியமிக்கப்பட்டவர் பிபின் ராவத். இவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆம் 1958- ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் தேதி பிறந்தார். தேசிய பாதுகாப்பு கல்லூரி மற்றும் இந்திய ராணுவ பயிற்சி கல்லூரியில் கல்வி பயின்றார். அங்கு அவரின் திறைமையை பாராட்டும் வகையில் போர்வாள் விருது வழங்கப்பட்டது. சுமார் 40 ஆண்டுகள் ராணுவத்தில் பிபின் ராவத், பரம் விசிட்ட சேவா பதக்கம், உத்தம் சேவா பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்கள், அவரின் சேவைக்காக வழங்கப்பட்டது.




2021 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி, பிபின் ராவத் தனது மனைவி மற்றும் சிலருடன் விமானப்படை விமானத்தில், தமிழ்நாட்டிலுள்ள குன்னூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டனில் உள்ள ராணுவப் பணியாளர் பயிற்சி கல்லூரிக்கு சொற்பொழிவாற்ற செல்லும் போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். பிபின் ராவத் உள்ளிட்ட 11 பேர் மரணமடைந்ததாக விமானப்படையால் உறுதி செய்யப்பட்டது. அவரின் மறைவு இந்தியாவை உலுக்கியது. மேலும் தமிழ்நாட்டு மக்களை இச்சம்பவம் மேலும் வருத்தத்திற்கு உள்ளாக்கியது. இந்தியாவின் முதல் பாதுகாப்பு படைகளின் தலைமை படை தளபதியான பிபின் ராவத்தை கவுரவிக்கும் வகையில், 2022 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதை வழங்கியது.


அபிநந்தன்:


2019-ம் ஆண்டு பிப்ரவரி 27- தேதி இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் போர் விமானத்தை வீரர் அபிநந்தன் மிக் 21 ரக விமானத்தில் விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்தினார். 


புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட தாக்குதலில்,  2019-ம் ஆண்டு பிப்ரவரி 27- தேதி இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் போர் விமானத்தை வீரர் அபிநந்தன் மிக் 21 ரக விமானத்தில் விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்தினார். ஆனால், அவர் தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்துவிட அதனைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் இந்திய வரலாற்றின் திக் திக் நிமிடங்கள்.




பிப்ரவரி 27 ஆம் தேதியன்று மிக்-21 ரக விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்துவிட்டார் அபிநந்தன். அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதிலிருந்து பேராசூட்டின் மூலம் அபிநந்தன் தரை இறங்கினார். ஆனால், அவர் இறங்கியிருந்தது பாகிஸ்தான் மண். 


அங்கிருந்தவர்கள் அபிநந்தனை சூழ்ந்து தாக்கினர். அதற்குள் ராணுவத்துக்கு தகவல் சென்று சேர. அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தின் வசம் சென்றார்.


அபிநந்தன் தாக்கப்பட்ட காட்சிகளும், அவர், பாகிஸ்தான் ராணுவத்தினரால் விசாரிக்கப்பட்ட காட்சிகளும் வெளியாகின. ஒட்டுமொத்த தேசமும் அபிநந்தனுக்காக பிரார்த்தனை செய்தது. அபிநந்தனை மீட்க வேண்டும் என இந்திய அரசு முயற்சி செய்தது. இந்தியா பல்வேறு நாடுகளிடமும் இது குறித்து அழுத்தம் கொடுத்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் சமரச முயற்சியில் ஈடுபட்டன. 


பல்வேறு வகையிலான முயற்சிகளுக்குப் பின்னர், 2019 மார்ச் 1 அன்று வாகா எல்லையின் வாயிலாக அபிநந்தன் விடுவிக்கப்பட்டார். அபிநந்தன் விடுதலையான பின்னர், சில காலம் ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தார். அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவருக்கு தீவிர மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின்னர், அவர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார். விங் கமாண்டராக இருந்த அவர் மேற்கு மண்டலத்தின் கமாண்டராக நியமிக்கப்பட்டார்.


பின்னர் நாட்டுக்காக உயிரையும் துச்சமென கருதிய அபிநந்தனுக்கு, 2021 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வீர் சக்ரா விருது  வழங்கி கவுரவித்தார்.