தமிழ்நாடு:
- பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று 11 கூடுகிறது.
- தங்கள் கோரிக்கைகளை தமிழ்நாடு நிதியமைச்சர் தொடர்ந்து புறக்கணித்து வருவதால், பிப்ரவரி 12ஆம் தேதி மாநாடும், மார்ச் 5ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவிப்பு.
- 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டம் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
- காவல் துறை அனுமதித்தாலும், அனுமதிக்காவிட்டாலும் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் அறிவிப்பு.
- இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் நேற்று உற்சாகமாகத் தொடங்கி நடைபெற்றது. 17 காளைகளை அடக்கிய யோகேஸ்வரன் சிறந்த வீரராக அறிவிப்பு.
- நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் முட்டை கொள்முதல் விலை. 10 காசுகள் உயர்ந்து ஒரு முட்டை ரூ 5.65க்கு விற்பனை.
- பாஜகவின் சாதனைகளை தங்களது சாதனைகளாக முதலைமைச்சர் ஸ்டாலின் கூறிக்கொள்கிறார் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
- நிலம் கொடுத்தவர்களை என்.எல்.சி ஏமாற்றிவிட்டதாக இரண்டு நாள் நடைபயணத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு.
- நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் ஆலிவ்ரெட்லி ஆமை முட்டைகளை மண்ணில் புதைக்கும் பணிகளை மாவட்ட வன உயிரின காப்பாளர்கள் ஆய்வு செய்தனர்.
இந்தியா:
- டெல்லியில் ஏற்பட்டு வரும் கடும் குளிரினால் ஜனவர் 15ஆம் தேதி வரை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
- சபரிமலையில் உள்ள பம்பை நதியில் இ-கோலி பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
- ஜனநாயகத்தினை காக்க அனைத்து எதிர் கட்சிகளும் ஒருகிணைந்து செயல்படுவோம் என சந்திரபாபு நயுடு மற்றூம் பவன் கல்யாண் கூட்டாக பேட்டி.
- உலகின் நீளமான நதிக் கப்பலான எம்.வி கங்கா விலாஸ் சொகுசுக் கப்பலை வாரணாசியில் வரும் 13ஆம் தேதி பிரதமர் மோடி தொடக்கிவைக்கிறார்.
- மோசமான வானிலையால் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் 20 விமானங்கள் தாமதம்
- ஹரியானாவை அடைந்த ராகுல் காந்தியின் தே ஒற்றுமைப் பயணம்; கடும் குளிர், பனிமூட்டத்துக்கு மத்தியில் நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல்
- ”பாஜக ஆளும் மாநிலங்களில் தேச ஒற்றுமைப் பயணத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்காது எனும் கூற்று பொய்யானது” - ராகுல் காந்தி
உலகம்
சீனாவில் கண் தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம்: சாலை விபத்தில் 17 பேர் உயிரிழந்த சோகம்!
- ரஷ்ய தலைநகரில் திரும்பிய திசைகளில் எல்லாம் பனிக்கட்டிகள், நிலமை சீராகும் வரும் வரையில் செஞ்சதுக்கத்துக்கு பொதுமக்கள் வரவேண்டாம் என அரசு அற்விப்பு.
- செனகல் நாட்டில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 38 பேர் பரிதாபமாக பலி.
விளையாட்டு
- வேலூரில் நடைபெற்ற தென் இந்திய அளவிலான கபடிப்போட்டியில் ஆண்கள் பிரிவில் கேரள அணியும் பெண்கள் அணியில் ஒட்டனச்சத்திரம் அணியும் சாம்பியன்.
- சாகச கார் பந்தயத்தில் பிரான்ஸ் வீரர் வெற்றி, பந்தய இலக்கினை 3 மணி நேரம் 26 நிமைடங்களில் கடந்து முதலிடம்.
- அடிலெய்டு ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச், இறூதிப் போட்டியில் அமெரிக்க வீரரை போராடி வென்றார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து முன்னாள் சாம்பியனும் பிரபல ஜப்பான் வீராங்கனையுமான நவோமி ஒசாகா விலகல்