தமிழ்நாடு:



  • ’கலைஞர் நூற்றாண்டு’ பெயரில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறப்பு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

  • ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சென்னையில் 18,000 போலீசார் சிறப்பு பாதுகாப்பு - 10 முக்கிய சர்ச், கோயில்களில் பாதுகாப்பு ஏற்பாடு

  • ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் - திமுக தலைமை கழகம் வேண்டுகோள்

  • திருநெல்வேலி, தூத்துக்குடியில் மின் கட்டணத்தை செலுத்த பிப்ரவரி 1 வரை அவகாசம்- அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

  • தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது - அமைசர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தகவல்

  • தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களில் 43,432 மருத்துவ முகாம்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

  • உச்சநீதிமன்ற அறிவிப்பு எதிரொலி: ஆளுநருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு - நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வலியுத்தினார். 

  • ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்பு சுமூகமாக இருந்தது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

  • கோவையில் இருந்து பெங்களூரு வரை வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.


இந்தியா: 



  • பஜ்ரங் புனியாவை போலவே, தனக்கு வழங்கப்பட்ட விருதுகளை திருப்பி அளிக்க உள்ளதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் அறிவித்திருந்தார்.

  • புத்தாண்டின் முதல் நாளான நாளை ஜனவரி 1ம் தேதி இஸ்ரோ பி.எஸ்.எல்.வி சி 58 ராக்கெட்டை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

  • மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் நோக்கில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு வர வேண்டாம் என பொது மக்களை பிரதமர் மோடி கேட்டு கொண்டுள்ளார்.

  • இந்துக்களுக்கு மட்டுமே பகவான் ராமர் சொந்தமில்லை என தேசிய மாநாட்டு கட்சி தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

  • அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலையம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் ஆகியவற்றை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

  • பாலியல் வன்கொடுமை வழக்கில் நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானேவை குற்றவாளியாக அறிவித்துள்ளது காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம்.


உலகம்: 



  • இஸ்ரேல்-ஹமாஸ் போர் இன்னும் பல மாதங்களுக்கு தொடரும் - நெதன்யாகு அதிர்ச்சி தகவல்.

  • இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவு.

  • பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்; முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் 2 வேட்புமனுக்களும் ரத்து.

  • மியான்மரில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு.

  • அமெரிக்க அதிபர் தேர்தல்- மேலும் ஒரு மாநிலத்தில் டொனால்டு ட்ரம்புக்கு தடை.

  • இந்தியா- பிலிப்பைன்ஸ் கடற்படைகளின் கூட்டுப்பயிற்சி; சீனா கடும் எதிர்ப்பு


விளையாட்டு: 



  • இலங்கை டி20 அணியின் கேப்டனாக நட்சத்திர ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்கா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. 

  • சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி - இன்று தொடக்கம். ப்ரோ கபடி லீக் 2023: தமிழ் தலைவாஸ் - பெங்களூரு புல்ஸ் இன்று பலப்பரீட்சை. ப்ரோ கபடி லீக்: குஜராத் ஜெயண்ட்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் இன்று மோதல்