தமிழ்நாடு:


 



  • கனமழை காரணமாக இன்று சென்னை, , ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இயங்கும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  • திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (30.11.2023)  வியாழக்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும்.

  • செம்பரம்பாக்கத்தில் இருந்து 2,429 கன அடி நீர் வெளியேற்றம். இதன் காரணமாக, கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

  • மதுரையில் டைடல் பார்க் கட்டுமான பணி - மண் பரிசோதனை துவக்கம்

  • காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர்,  மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம்  மாவட்டங்கள்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

  • வீட்டிற்குள் முடங்கும் காலம் மலையேறிவிட்டது தமிழக மாணவிகள் உலகெங்கும் சாதிக்க வேண்டும்: கல்லூரி திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

  • அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தின்கீழ் பயிற்சி முடித்தவர்களை அர்ச்சகராக நியமிக்க கூடாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

  • பொங்கல் பரிசை திமுக அரசு முறைகேடு இல்லாமல் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 


இந்தியா: 



  • அதிகரித்து வரும்  மோசடிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும்  புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளது. 

  • தெலங்கானா சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (நவம்பர் 30) ​​நடைபெறுகிறது. 

  • சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்ற கௌரவ் பாரத் ரயிலில் 80 பயணிகள் திடீரென வாந்தி, பேதி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  • டெல்லியில் நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், நேற்று சில இடங்களில் காற்று மாசு 400-ஐ கடந்து பதிவாகி உள்ளது.

  • நாடு முழுவதும் 49 இடங்களில் நடத்த திட்டம் கர்ப்ப காலத்தில் இதயநோய் பராமரிப்பு குறித்து ஆய்வு

  • உத்தரகாசி சுரங்க விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி நலம் விசாரித்தார்.

  • 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை - பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்.


உலகம்: 



  • ஜப்பானின் அமெரிக்க ராணுவ விமானம் நொறுங்கி விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு: 7 பேர் மாயம்.

  • 10 இஸ்ரேலியர்கள், 4 தாய்லாந்து பணய கைதிகளை விடுதலை செய்தது ஹமாஸ் அமைப்பு

  • போப் ஆண்டவருக்கு திடீர் உடல்நலக்குறைவு - துபாய் பயணம் ரத்து.

  • சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்பட்டது இந்தியாவின் அற்புதமான சாதனை என்று ஆஸ்திரேலிய பிரதமர் பாராட்டியுள்ளார்.


விளையாட்டு: 



  • சர்வதேச பேட்மிண்டன் போட்டி: ஸ்ரீகாந்த், சாய் பிரனீத் தோல்வி

  • வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் சதமடித்து டெஸ்ட் போட்டியில் தன்னுடைய 29வது சதத்தை பூர்த்தி செய்தார்.

  • பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் பிசிசிஐ மீண்டும் ராகுல் டிராவிட்டிற்கு பயிற்சியாளரான வாய்ப்பை மீண்டும் வழங்கியுள்ளது.

  • உலகின் முன்னணி வீரரான விராட் கோலி அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.