தமிழ்நாடு:



  • சென்னை தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்ட மறைந்த நடிகர் விஜயகாந்தின் உடல் - அரசியல்வாதிகள், நடிகர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி

  • கோயம்பேட்டில் விஜயகாந்தின் உடலுக்கு விடிய விடிய காத்திருந்து அஞ்சலி செலுத்திய பொதுமக்கள், ரசிகர்கள் - மத்திய அரசு சார்பில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வருகை

  • பிற்பகல் 1 மணிக்கு தொடங்குகிறது விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் - மாலை 4.45 மணிக்கு அவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது

  • விஜயகாந்தின் மறையையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள்  அனைத்தும் இன்று ரத்து

  • பெருமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களில் இன்று முதல் நிவாரணத் தொகை விநியோகம் - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்

  • சென்னையில் புதியதாக 23 பேருக்கு கொரோனா தொற்று - சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு

  • கூடங்குளம் அணுமின் திட்டத்தின் அடுத்தகட்டமாக புதிய அணு உலைகளை அமைப்பது தொடர்பான ரஷ்யா உடனான ஒப்பந்தம் அதிர்ச்சி அளிக்கிறது - பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

  •  


இந்தியா:



  • நாளை அயோத்தி செல்கிறார் பிரதமர் மோடி - புதிய ரயில் நிலையத்தை திறந்து வைக்கிறார்

  • காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: நாக்பூரில் கட்சி பிரசாரத்தை துவங்கிய ராகுல்காந்தி சூளுரை

  • பணமோசடி வழக்கு - அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி பெயர் சேர்ப்பு

  • சில்லறை சந்தையில் பாரத் அரிசி - விலையேற்றத்தை தடுக்க 25 ரூபாய்க்கு விற்க மத்திய அரசு திட்டம்

  • அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற உழைத்து வருகிறோம் - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

  • ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் முன்னிலையில், அவரது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு

  • மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது

  • அதிகரிக்கும் கொரோனா தொற்றை கண்டு மக்கள் பயப்பட வேண்டாம் - எய்ம்ஸ் மருத்துவ கண்காணிப்பாளர் 

  • அடுத்த இரண்டரை ஆண்டுகளில் இந்தியா 5 டிரில்லியன்  டாலர் பொருளாதாரமாக மாறும் - அமைச்சர் பியுஷ் கோயல் நம்பிக்கை


உலகம்:



  • இந்தியா - பிலிப்பைன்ஸ் கடற்படைகளின் கூட்டுப்பயிற்சி - சீனா கடும் எதிர்ப்பு

  • கத்தார்: இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சிறை தண்டனையாக குறைப்பு

  • இந்திய பிரதமர் மோடி ரஷ்யாவிற்ஜ்கு வருகை தருவது மகிழ்ச்சி அளிக்கிறது - அதிபர் புதின்

  • உலக பிரச்னைகளுக்கு மத்தியில்  இந்தியா உடனான நட்புறவில் முன்னேற்றம் என புதின் மகிழ்ச்சி


விளையாட்டு:



  • இந்தியா உடனான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்கா அணி அபார வெற்றி - ஆட்டநாயகனாக டீன் எல்கர் தேர்வு

  • இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

  • உலகக் கோப்பை கால்பந்து: 64 ஆண்டுகளுக்குப் பின்  வேல்ஸ் அணி தகுதி