தமிழ்நாடு:



  • உலகம் முழுவதும் இன்று உற்சாகமாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

  • தூத்துக்குடி, திருநெல்வேலியில் 750 இடங்களில் உடைப்பு; போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணி - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி

  • நீண்ட நாட்கள் ஒரே இடத்தில் பணியாற்றி வந்த 45 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம் - டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு

  • மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டால் தான் தமிழக அரசுக்கு நல்ல பலன் கிடைக்கும் - எல்.முருகன்

  • தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

  • தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

  • விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.

  • 4 தென் மாவட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேச்சு; தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என உறுதி

  • மார்கழி திருவிழாவை அறநிலையத்துறையே நடத்த வேண்டும் சாதியின் பெயரால் கொடுமைகள் தொடர்வது தடுக்கப்பட வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு


இந்தியா:



  • இந்திய மல்யுத்த சம்மேளனத்தை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

  • நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய அளவில் பல்வேறு நிர்வாகிகளை மாற்றியும், மாநில பொறுப்பாளர்களை நியமித்தும் காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது.

  • கொரோனா ஜேஎன்.1 வேரியண்ட் அதிதீவிரமாக பரவுவதாக, எய்ம்ஸ் முன்னாள் இயக்குனர் ரந்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.

  • இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நடத்த தற்காலிக குழு ஒன்றை அமைக்கும்படி இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

  • பிரதமர் மோடி வருகின்ற ஜனவரி 2ம் தேதி திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்க உள்ளார்.

  • ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டம் மசூதி அருகே ஓய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரியை பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

  • இந்தி பேசும் நபர்கள் தமிழ்நாட்டில் கழிவறைகளை சுத்தம் செய்து வருவதாக திமுக எம்.பி. தயாநிதி மாறன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


உலகம்:



  • நிகரகுவா நாட்டில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 19 பேர் உயிரிழப்பு என தகவல்

  • இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் 70 பேர் உயிரிழப்பு - ஹமாஸ் அமைப்பு தகவல்.

  • அன்பின் அரவணைப்பிலும், நிதானத்துடனும் கிறிஸ்துமஸை கொண்டாடுங்கள் - போப் ஆண்டவர்.

  • எக்ஸ் செயலி மூலம் விரைவில் பணம் பரிமாற்றம் - எலான் மஸ்க் தகவல்


விளையாட்டு: 



  • ப்ரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் - ஹரியானா ஸ்டீலர்ஸ் இன்று பலப்பரீட்சை.

  • 2024 டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக பொல்லார்டு நியமனம்

  • இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க்கில் (நாளை) டிசம்பர் 26 முதல் டிசம்பர் 30 வரை நடைபெறுகிறது.

  • ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி முதல் முறையாக ஆஸ்திரேலியா அணியை டெஸ்டில் வீழ்த்தி வரலாறு படைத்தது. 

  •