தமிழ்நாடு:



  • தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் விலை ரூ.39 குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி 

  • தமிழ்நாட்டின் மழை, வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் 

  •  வைகுண்ட ஏகாதசி பெருவிழா - ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு 

  • வெள்ள நிவாரண நிதியை ஏன் வங்கி கணக்கில் செலுத்தவில்லை - தமிழ்நாடு அரசுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி 

  • வெள்ள மீட்பு நடவடிக்கைகளில்அரசு சரியாகச் செயல்படவில்லை என நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு - சிலரிடம் பெரியார் வழியில் பேச வேண்டியிருப்பதாக  அமைச்சர் உதயநிதி பதிலடி 

  • வெள்ள பாதிப்பில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பும் தூத்துக்குடி - பேருந்து, ரயில் சேவை மீண்டும் தொடக்கம் 

  • ஜனவரி 2 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை, சிறப்பு வகுப்புகள் நடந்தக்கூடாது - நெல்லையில் மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு 

  • சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி முதலமைச்சர் ஸ்டாலினுடன் சந்திப்பு 

  • வனப்பகுதியில் தொடர்ந்து மழை - சதுரகிரி மலைப்பகுதிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை 

  • தென்மாவட்டங்களில் வெள்ள மீட்பு பணிகள் நிறைவு - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல் 

  • திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்- கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் 

  • கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து மங்களூரு, கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

  • தூத்துக்குடி மழை வெள்ளம் பாதிப்பு - நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 6 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்த தமிழ்நாடு அரசு 

  • நடிகைகள் த்ரிஷா, குஷ்பூ, நடிகர் சீரஞ்சிவி மீது அவதூறு வழக்கு- தள்ளுபடி செய்து நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உயர்நீதிமன்றம் 

  • முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியனின் தேர்தல் வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

  • ரூ.6 ஆயிரம் வெள்ள நிவாரணம் கேட்டு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரேஷன் அட்டை இல்லாத 5.5 லட்சம் பேர் விண்ணப்பம் 


இந்தியா:



  • வைகுண்ட ஏகாதசி பெருவிழா - திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் குவிந்த பக்தர்கள் 

  • பப்பூவா நியூ கினியாவில் எரிமலை வெடிப்பால் மக்கள் பாதிப்பு - இந்தியா சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு 

  • 75வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பங்கேற்க உள்ளதாக தகவல் 

  • திருப்பதில் அலிபிரி நடைபாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் - பக்தர்கள் அச்சம் 

  • தமிழ்நாட்டிற்கு வரி பகிர்வாக ரூ.2,976 கோடியை விடுவித்த மத்திய அரசு 

  • காஷ்மீரில் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீர மரணம் 

  • சபரிமலையில் டிசம்பர் 27 ஆம் தேதி மண்டல பூஜை - குவியும் பக்தர்கள் 


உலகம்: 



  • அரசின் ரகசிய தகவல்களை கசிய விட்டதாக வழக்கு - பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன் 

  • சீனா நிலநடுக்க சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 148 ஆக உயர்வு 

  • காஸாவின் தங்கள் குழுவை ஒழிக்க நினைக்கும் இஸ்ரேல் திட்டம் தோல்வி அடையும் என ஹமாஸ் குழு சூளூரை 

  • அமெரிக்கா சென்ற இந்திய மாணவி மாயம் - கண்டுபிடித்தால் ரூ.8 லட்சம் பரிசு அறிவிப்பு 

  • செக் குடியரசு நாட்டில் பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு - 15 பேர் உயிரிழப்பு


விளையாட்டு: 



  • சென்னை பல்கலைக்கழக தடகளப்போட்டி- எம்.ஓ.பி. வைஷ்ணவா அணி தொடர்ந்து 19வது முறையாக சாம்பியன் 

  • புரோ கபடி லீக் தொடரில் அரியானை அணியை வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸ் த்ரில் வெற்றி 

  • புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி பாட்னா பைரேட்ஸ் வெற்றி 

  • மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் பிரிஜ் பூஷனின் ஆதரவாளர் வெற்றி - பத்ம ஸ்ரீ விருதை திரும அளிக்க பஜ்ரங் பூனியா முடிவு