தமிழ்நாடு:



  • மக்களுக்கு நேரடியாக நிதி வழங்கப்படுகிறதா..? அப்பட்டமாக பொய் சொல்லும் மோடி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

  • புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை முயற்சியில் சிறுமி உயிரிழப்பு - கொலை செய்தவர்கள் மீது பாய்ந்த போக்சோ சட்டம்

  • ‘நீங்கள் நலமா..?” என்ற திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் நேரடியாக பேசினார்; அரசு நலத்திட்டங்களில் பயன்களையும் கேட்டறிந்தார்.

  • அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை; தமிழ்நாடு முழுவதும் 1ம் வகுப்பில் 36,000 குழந்தைகள் சேர்ப்பு

  • சனாதன பேச்சு விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

  • குழந்தை கடத்தல் என சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டும் - பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்

  • மக்களவை தேர்தலில் பாஜகவுடன் இணைந்து செயல்பட சமத்துவ மக்கள் கட்சி முடிவு - சரத்குமார் அறிவிப்பு

  • மக்களவைத் தேர்தலில் தே.மு.தி.க.விற்கு 4 தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  • ராமநாதபுரம் தொகுதி மக்களுக்கு அறிமுகமான நவாஸ் கனியை மீண்டும் வேட்பாளராக களமிறக்குகிறது இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.

  • அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும் விவகாரத்தில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.


இந்தியா: 



  • கர்நாடகாவில் 10 ஆம் வகுப்பு வரலாற்று பாடநூலில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

  • நீருக்கடியிலான நாட்டின் முதல் மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை, கொல்கத்தாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி பேரணியாக செல்லும் விவசாயிகளின் போராட்டம் நேற்று மீண்டும் தொடங்குகிறது.

  • டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகள்; எல்லைகளில் காவல்துறையினர் குவிப்பு

  • போதை மாத்திரை விற்பனை விவகாரம்; கும்பல் தலைவனை பிடிக்க குஜராத் விரைந்தது தனிப்படை

  • பிரதமர் மோடி தனது பதவியை சிறப்பாக கையாள்வதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

  • தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் பெயர்களை வெளியிடுவதை பா.ஜ.க விரும்பவில்லை - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே


உலகம்: 



  • நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழப்பு.

  • இலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.

  • தொடரும் பதற்றம்: மற்றொரு ரஷ்ய போர்க்கப்பலை மூழ்கடித்ததாக உக்ரைன் அறிவிப்பு.

  • இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் - தூதரம் அறிவுறுத்தல்


விளையாட்டு: 



  • இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் இன்று தொடக்கம்.

  • பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டிக்கான அட்டவணை வெளியீடு

  • ஐபிஎல் தொடரை பின்பற்றி இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) என்ற புதிய கிரிக்கெட் தொடர்  இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  • இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்குவதன் மூலம் அஸ்வின் இன்று தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறார். 

  • இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்று முன்னாள் இந்திய வீரர் லட்சுமன் சிவராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

  • ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்  12 வது இடத்தில் இருந்து இரண்டு இடங்கள் முன்னேறி 10 வது இடத்தை பிடித்துள்ளார்